tamilnadu

பேருந்து கட்டணம் திடீர் உயர்வு

திருநெல்வேலி, மே 19-நெல்லையில் இருந்து ஆலங்குளம்வழியாக சுரண்டை , தென்காசி, செங் கோட்டை வழித்தட பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பல லட்சக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட தலைநகரான நெல்லைக்கு அரசு அலுவல்கள், வியாபாரம், கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக தினமும் பல்லாயிரக்கணக் கில் சென்று வருகின்றனர். பொதுமக்கள் எளிதில் சென்று வர அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலானவைகள் காலாவதியான நிலையில் ஓட்டை உடைசலான நிலையில் உள்ளன. ஏற்கனவே கடந்தசில வருடங்களுக்கு முன்பு பஸ் கட்டணம் தாறுமாறாக உயர்ந்த நிலையில் உடைந்த பஸ்களை எல்எஸ்எஸ், எஸ்எம்எஸ், ஓன்டூஓன், பாயிண்ட் டூபாயிண்ட், எக்ஸ்பிரஸ், பைபாஸ் ரைடர், நான்ஸ்டாப் என்ற பெயரில் பல ரகங்களில் கட்டணங்களை உயர்த்தி தனியார்பேருந்துகள் கட்டணங்களை உயர்த்தி வசூலிக்க வழி காட்டியது. இந்த நிலையில் கடந்த மூன்றுதினங்களாக நெல்லையில் இருந்துஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி மார்க்கமாக ஓடும் அரசு பேருந்துகளில் அறிவிக்கப்படாத திடீர்கட்டண உயர்வு ரூ.5 வரை அதிகமாக்கி புகுத்தப்பட்டது. ஆலங்குளத் திற்கு ரூ.32லிருந்து 35 ஆகவும், வீகேபுதூருக்கு ரூ.40 விருந்து ரூ. 45 ஆகவும், சுரண்டைக்கு ரூ.46 லிருந்து 50 ஆகவும் தென்காசி ஓன் டூ ஓன் பஸ்ஸில் ரூ.65 ஆகவும் உயர்த்தப்பட்டது.இதனால் வழக்கமான கட்டணத்தை கொண்டு வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்தனர். அதனால் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் வேறுவழியின்றி பயணித்தனர். காசு குறைவாக கொண்டு வந்த முதியவர்களுக்குசில பெரிய மனம் படைத்தவர்கள் உதவினர். இதுகுறித்து போக்குவரத்து கழக தரப்பில் விசாரித்த போது நெல்லை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய்பதிக்கும் வேலை நடப்பதால் தச்சநல்லூர், ராமையன்பட்டி வழியாக செல்வதால் நெல்லையில் இருந்து திரும்பி செல்லும் போது மட்டும் (ஒருவழி பயணத்திற்கு) கூடுதல் கட்டணம்வசூலிக்கப்படுவதாகவும் நெல்லைக்கு வரும் போது நடப்பு கட்டணமே வசூலிப்பதாகவும் கூறினர். பயணிகள் தரப்பில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவது என்பது நிர்வாக வசதிக்காக எடுக்கப்படும் முடிவு அதற்காககட்டணங்களை அதிகளவு கூட்டுவது ஏற்புடையது அல்ல. ஏற்கனவே அரசுபேருந்துகள் தனியார் பேருந்துகளை விட அதிகளவில் கட்டணம் வசூலித்து மக்களை சிரமத்தில் ஆழ்த்தி வரும் நிலையில் இக்கட்டண உயர்வு பொது மக்களை மேலும் பாதிக்கும். எனவே அரசுபோக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு வழி பயணத்திற்கு உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.