tamilnadu

img

குளிர்கால ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இடம்பிடிக்க முடியாமல் திணறும் பிரிட்டன்

ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவில் பிரிட்டன் (இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து) விளையாட்டு உலகம் செய்தியாக சொல்லும் படி தனக்கென ஒரு பதக்கப்பெட்டியை (வீரர்கள் வென்ற எண்ணற்ற பதக்கங்கள்) கைப்பற்றுவது வழக்கம். கோடைகால ஒலிம்பிக் தொடரில் மிக சிறப்பாக விளை யாடும் பிரிட்டன், குளிர்கால ஒலிம்பிக்கில் பெயரள விற்கு களமிறங்கி ஒற்றைப்படைகளில் பதக்கங்கள் வெல்லும். தற்போது நடைபெற்று வரும் பெய்ஜிங் குளிர் கால ஒலிம்பிக் தொடரில் பிரிட்டன் வீரர் - வீராங்கனை களுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை. பிரிட்டனும் பதக்கப்பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. கடந்த குளிர்கால ஒலிம்பிக் தொடரில் (2018 - தென் கொரியா) 1 தங்கம், 4 வெண்கலம் என 5 பதக்கங்கள் குவித்து 19-வது இடத்தை பிடித்தது. இன்னும் ஒரே ஒரு நாள் (பிப்.,20) பாக்கி உள்ள நிலையில், பிரிட்டன் கடைசி நாளாவது பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் இடம்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பிரிட்டன் 50 வீரர் - வீராங்கனைகளை அனுப்பியது என்பது குறிப்பி டத்தக்கது.

பதக்கப்பட்டியல் 
நாடுகள்                 தங்கம்        வெள்ளி       வெண்கலம்    மொத்தம்
நார்வே                        15                     8                       12                    35
ஜெர்மனி                     10                     7                        5                     22
அமெரிக்கா                  8                     9                        6                     23    
நெதர்லாந்து                 8                     5                       4                      17
ஸ்வீடன்                          8                     5                       4                      17