tamilnadu

img

பாதுகாப்புத் துறையில் கருப்பு தினம் 10 ஆயிரம் ஊழியர் போராட்டம்

படைத்துறை ஆலைகளை  7 கார்ப்பரேசன்களாக உடைத்தது ஒன்றிய அரசு 

அம்பத்தூர், அக். 15-  220 ஆண்டுகள் பழமையான நாட்டின் பாதுகாப்பிற்கு முப்படை களுக்கு இணையாக தொண்டாற்றிய படைத்துறை தொழிற்சாலைகளை  7 கார்ப்பரேசன்களாக உடைத்துள்ளது  ஒன்றிய பாஜக அரசு.இதற்கு பாது காப்புத்துறை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த   தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து சுமார் 10 ஆயிரம் பாதுகாப்புத் துறை  ஊழியர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்திய பாதுகாப்புத் துறையின் 41 படைத்துறை தொழிற்சாலைகளை 7 கார்ப்பரேசன்களாக மாற்றி, தில்லி யில் உள்ள டிஆர்டிஓ தலைமை யகத்தில் ஆன்லைன் மூலம் பிரதமர்  மோடி துவக்கி வைத்தார். கார்ப்பரேசன் களாக மாற்றும் முயற்சியை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன. பிரதமர் மோடி யின் இந்த துவக்க விழாவை அனைத்து  ஊழியர்களும், அவர்களது குடும்பத் தினரும் புறக்கணிக்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு  அர்ப்பணிக்கிறோம் என்ற பெய ரில்   அக்டோபர் 15 வெள்ளியன்று தொழி லாளர்களின் எதிர்ப்பையும் மீறி   பிரதமர் மோடி படைத்துறை  தொழிற் சாலைகளை 7 கார்ப்பரேசன்களாக மாற்றி அறிவித்துள்ளார்.  மேலும் இந்திய ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய 7 புதிய தனியார் நிறுவனங்களுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 66 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த துவக்க விழாவை பாது காப்புத் துறை ஊழியர்களும், அவர் களுடைய குடும்பத்தாரும் முழுமை யாக புறக்கணித்தனர். சுமார் 10 ஆயிரம் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் இன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் காணொலிக் காட்சி வாயிலாக நடை பெறும் இந்த நிகழ்ச்சியில் சம்மேளன தலைவர்கள், ஊழியர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

தமிழக அமைச்சர் புறக்கணிப்பு

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர். ஆவடியில் உள்ள அனைத்து தொழிற்சாலை நுழைவு வாயில்களிலும் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
 


 

 

;