tamilnadu

img

வரலாறு நெடுகிலும் தொடரும் பெண்களின் போராட்டம்

நர்மதா தேவி எழுதிய ‘பெண் அன்றும் இன்  றும்’ நூலை பாரதி புத்தகாலயம் பதிப்பித்  துள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா புத னன்று (ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “கடந்த காலம், நிகழ்காலம் ஆகிய வற்றில் பெண்களின் நிலை, பெண்ணுரிமை, பெண்ணடிமைத்தனம் என பல்வேறு அம்சங் களை, வரலாற்று ரீதியிலும், கருத்தியல் ரீதி யிலும் நடைபெற்ற போராட்டங்களையும், களப் போராட்டங்களையும் முழுமையாக பதிவு செய்துள்ளார். சில பெண்கள் தனியாகவும் அமைப்பாகவும் பல்வேறு இயக்கங்களை நடத்தி யுள்ளனர். தனிநபர் போராடுவதை விட அமைப்  பாக போராடுகிறபோது, சமூகத்தில் விழிப்பு ணர்வு உருவாகிறது. அது மக்கள் சக்தியாக மாறி  பெண்ணுரிமையை பெறுவதற்கு வழிவகுக்கி றது” என்றார். “1953ஆம் ஆண்டு மன்னார்குடியில் நடை பெற்ற விவசாயிகள் சங்க மாநாட்டின் ஒருபகுதி யாக பெண் விவசாயிகளுக்கென்று ஒருநாள்  மாநாடு நடைபெற்றதையும், தமிழ்நாடு மட்டு மின்றி கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு  வங்கம் போன்ற மாநிலங்களில் பெண்கள் தலைமை தாங்கி நடத்திய போராட்டங்களையும், பெண்களின் பங்களிப்புகளையும் பதிவு செய்  துள்ளார்” என்று குறிப்பிட்ட அவர்,

தமிழகத்தில்  தடம் பதித்த அன்னை லட்சுமி, கே.பி.ஜானகி அம்மாள், பாப்பா உமாநாத் ஆகியோரை நினைவு கூர்ந்து பேசினார். கீழத்தஞ்சை பண்ணை அடிமைகளை விட, மகாராஷ்டிராவின் வார்லி பகுதியில் பழங்குடி மக்கள் மிக மோசமாக நடத்தப்பட்டதையும், கோதவரி பருலேக்கர் அந்த மக்களுக்காக போராடி, 60 பள்ளிகளை தொடங்கி கல்வி கற்க  ஏற்பாடு செய்ததையும் பகிர்ந்து கொண்டார். மும்பையில் ருக்மாபாய் தன்னுடைய குழந்தை திருமணத்திற்கு எதிராக நடத்திய போராட்ட வரலாற்றையும், அதன்காரணமாக திருமண வயது 10 லிருந்து 12 ஆக உயர்ந்ததையும் ஜி. ராமகிருஷ்ணன் விவரித்தார். “சமூக மாற்றத்திற்கான போராட்டத்தோடு பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்து நடத்து கிற போராட்டம் வெற்றி பெறுகிறது. பெண்ணு ரிமைக்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது” என்று குறிப்பிட்ட அவர், “1947 விடுதலைக்கு பிறகு பெண் விடுதலைக்காக நடந்த ஏராளமான சம்பவங்களை, சர்வதேச மக ளிர் தினம் உருவான வரலாற்றை, சமகாலப் பிரச்ச னைகளை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்” என்றும் அவர் கூறினார்.

கே.பாலகிருஷ்ணன்

நூலை வெளியிட்டு மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு: கீழத்தஞ்சையில் பண்ணையடி மைத்தனத்திற்கு எதிரான போராட் டத்தை சீனிவாசராவ் தொடங்குவதற்கு முன்பே, மணலூர் மணியம்மை போராடி  வந்ததை நூலாசிரியர் பதிவு செய்துள் ளார். தோழர் ஷாஜாதி அரசியல் கைதி யாக சிறைச்சாலைக்கு வந்ததை மணி யம்மை பார்த்து வியந்ததை ராஜம் கிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். வர லாறு நெடுகிலும் பெண்களின் போராட்  டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெண்கள், பெண் இயக்க வர லாற்றை அறிய ‘பெண்:வரலாறும் விடு தலைக்கான போராட்டமும்’ என்ற நூல் உதவியாக இருந்தது. அதற்கு பிறகு, இந்த நூல் பல்வேறு தகவல்களின் தொகுப்பாக வந்துள்ளது. பெண்ணடி மைத்தனத்தின் பல்வேறு கூறுகளை பேசு கிற இந்நூல், பெண் அடிமையாவதற்கு அடிப்படையான காரணம் எது என்பதை  ஆய்வு செய்து, அது ஒழிய மாற்று வழி என்ன என்பதை தீர்க்கமாகச் சொல்கிறது.

மநுஸ்மிருதியின்  கொடூரத் தாக்குதல்

ஆதி பொதுவுடமை சமூகத்தில் பெண்ணடிமைத் தனம் இல்லை; தாய்வழிச் சமூகம்தான் இருந்தது. தனி யுடமைச் சமூகம் வந்த பிறகுதான் ஆணா திக்கம் வளர்கிறது. பெண்கள் அடிமை யாக்கப்பட்டார்கள் என்று ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் பிரடெரிக் எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். இருப்பி னும், இந்தியாவில், தமிழ்நாட்டில் எங்கெல்ஸ் குறிப்பிட்ட முறையில்தான் பெண்ணடிமைத்தனம் உருவானதா? என்பதை ஆழ்ந்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. உலகம் முழுவதும் பெண்ணடி மைத்தனம் இருந்தாலும் கூட, இந்திய சமூகத்தில் மநுஸ்மிருதி பெண்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்துகிறது. உல கில் வேறு எந்த நாட்டிலும் விதவைக்  கொடுமை உள்ளதா? ஒரு அரசன்  இறந்ததும் அவனது 250 மனைவிகளை யும் நெருப்பில் (சதி) இறக்கி கொன்றார்  கள் என்பது வரலாறு. ஒவ்வொரு நாட்டி லும் ஆளும் வர்க்கம் தோன்றுகிறபோது அடிமைப்படுத்தக் கூடிய மனிதர்களை பிரித்து வைத்தது. அதில் ஒரு கொடூர மான கருவிதான் மநுஸ்மிருதி. பெரியார், அம்பேத்கர் போன்றோர் மநுஸ்மிருதியை எதிர்த்துப் போராடி யதை அங்கீகரிக்கிறோம். மநுஸ்மிருதி, வேதங்கள், பிராமணியம் இவற்றை  தவிர்த்துவிட்டால் பெண்ணடிமைத் தனம் ஒழிந்துவிடுமா? என்று கேள்விக் கான பதிலை இந்த நூல் தருகிறது. வர்ணங்களாக பிரிக்க மட்டுமல்ல, அடி மைமுறையை நியாயப்படுத்தவும் மநுஸ்மிருதி உருவானது. சூத்திரனுக்கு (உழைப்பாளிக்கு) சொத்துரிமை கூடாது  என்று மநுஸ்மிருதி கூறுவது வர்க்க ஆதிக்கத்தைத் தான் காட்டுகிறது. பெண்ணுரிமைப் போராட்டத்தை வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட் டத்தோடு இணைத்து நடத்த வேண்டும். சோசலிச சமூகம் அமையும்போதுதான் அனைத்துவிதமான இடர்பாடுகள் தீரும் என்று பறைசாற்றுவதுதான் இந்த  நூலின் சிறப்பு. பாஜக ஆட்சியில் நாடாளுமன்றத் தில் 13 விழுக்காடு பெண்கள்தான் உள்ள னர். 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கு தள்ளி வைத்துள்ளனர். பாஜக, ஆர்எஸ்எஸ் மநுஸ்மிருதியின் வாரிசுகளாக உள்ளனர். நவீன தாராள மயக் கொள்கையால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய தற்கால அம்சங்களும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலால் மார்க்சிஸ்ட் கட்சி பெருமை கொள்கிறது என்று அவர் கூறினார்.

மிகப்பெரிய பங்களிப்பு

நூலை பெற்றுக் கொண்டு பேசிய கவிஞர் சல்மா, பெண்ணுரிமைக்கான தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் கூறுகையில், “கம்யூனிச இயக்கம் எத்தகைய போரா ட்டங்களால் வளர்ந்துள்ளது. நிலப்பிர புத்துவ, ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் எவ்வாறெல்லாம் சுரண்டப்படு கிறார்கள். அதை எதிர்த்து எத்தகைய போராட்டங்கள் நடந்தன என்பதற்கான வரலாற்று ஆவணமாக இந்தப் புத்தகம் உள்ளது. கம்யூனிசத்தை அறிந்து கொள்ள இந்த நூலை வாசித்தால் போதுமானது. கம்யூனிச இயக்கத்தின் மீதான பற்றுள்ள ஒருவரால்தான் இதுபோன்ற புத்தகத்தை எழுத முடி யும். மிகப்பெரிய பங்களிப்பாக இந்த நூல் வந்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

நேர்மையான பதிவு

நூலை பெற்றுக் கொண்ட எழுத்தா ளர் ஓவியா குறிப்பிடுகையில், “18ஆம்  நூற்றாண்டில் தொடங்கி 21ஆம் நூற்றா ண்டு வரை இந்த நூல் பயணிக்கிறது.  முதலாளித்துவ சமூகம் வளர்ந்தது, அந்த  சமூகம் எவ்வாறு பெண்களைச் சுரண்டி யது, தொழிலாளர் நலச்சட்டங்கள் உரு வான வரலாறு என ஏராளமான தரவுகள் உள்ளன. வாசிப்பவருக்கு சலிப்புத் தட்டாத வகையில் உரையாடும் எழுத்து நடையோடு நூல் உள்ளது. டி.எம்.நாயர்,  பெரியார், அம்பேத்கர் போன்றோரை நேர்மையாக, முழுமைத் தன்மையோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கோள் நூலாக பயன்படுத்தும் வகையில் வந்துள்ள இந்த நூல், பெண்கள் இயக்கத்தில் நடத்த தத்துவார்த்தப் போராட்டம் போன்ற அம்சங்களையும் கொண்டு வந்திருக்கலாம்” என்றார்.

ஆழமாக பேசுகிற நூல்

அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் அகில இந்திய துணைத்தலை வர் உ.வாசுகி குறிப்பிடுகையில், “பெண்கள் பல்வேறு பரிமாணங்களில் சந்திக்கும் சுரண்டல், ஒடுக்குமுறையை வரலாற்று, வர்க்கப் பின்புலத்தோடு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதி,  வர்க்கம், பாலினம் சார்ந்து ஒடுக்குமுறை  இருக்கும். அது ஒரே சீராக இருக்காது. சமூகத்தில், பெண்களின் வீடுசார் உழைப்பு கண்ணுக்கு புலப்படாததாக உள்ளது. குடும்ப கவனிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவை பெண் சார்ந்த தாகச் சித்தரிக்கப்படுகிறது. கேரள இடது முன்னணி அரசு 3ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் மொத்த குடும்பமும் சமை லறையில் சமைக்கும் காட்சியை வைத்  துள்ளது. கருத்தியல் ரீதியான போரா ட்டத்தை நடத்துகிறது. இந்தியாவில் அரசியல் கட்சிகள் மேடையில் பேசத் தயங்குகிற நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான் தனது திட்டத்தில் குடும்பக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்கிறது” என்றார். “குடும்பக் கட்டமைப்பு, ஆண் பெண்  உறவு, திருமண முறை, குழந்தைப் பேறு  என அனைத்துமே மாறி மாறி வந்துள்  ளதையும், குடும்பக் கட்டமைப்பு புனித மானது என்ற மாய பிம்பத்தை இந்த  நூல் தகர்க்கிறது. பெண்களின் மலி வான உழைப்பைப் பயன்படுத்தி லாப மீட்டுவதோடு, தொழிலாளிகளின் ஊதிய  விகிதத்தை குறிப்பிட்ட மட்டத்திலேயே வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே, பெண்ணடிமைத்தனத்தை நவீன  முதலாளித்துவ சமூகம் தகர்க்காமல் பாதுகாக்கிறது. இதுபோன்ற ஆழமான அம்சங்களும் நூலில் உள்ளன” என்றார். திராவிட, பொதுவுடமை இயக்கங்க ளின் பங்களிப்பால்தான் தமிழகத்தில் மநு வாத சித்தாந்தம் ஆழமாக வேரூன்றாமல்  உள்ளது. வரலாறு எழுதும்போது பெரி யாரியம், அம்பேத்கரியம் தவிர்க்க முடி யாது. அதேபோன்று பிறர் வரலாறு எழு தும் போது கம்யூனிஸ்ட்டுகளின் வர லாற்றை விட்டுவிடாமல் எழுத வேண்டும் என்று வலியுறுத்திய வாசுகி, “ஒட்டு மொத்த விடுதலைக்கு களம் அமைத்து கொடுக்கிற சோசலிச சமூகம் வருவ தற்கான போராட்டத்தோடு, பெண் விடு தலையில் நம்பிக்கை உள்ள அனை வரும் இணைந்து நிற்க வேண்டும் என்  பதை நூல் ஆழமாக கூறுகிறது” என்றார்.

சுரண்டல்

சிஐடியு துணைப்பொதுச் செயலா ளர் எஸ்.கண்ணன் பேசுகையில், “பெண்  ஒரு தொழிலாளி என்ற கண்ணோட்டத் தில் நூல் அமைந்துள்ளது. உழைப்பைச் சுரண்டவே பெண்ணடிமைத்தனம் உள்ளது. சாதி என்கிற பெயரில் எளி தாகச் சுரண்டுகிறார்கள். சாதியும், வர்க்கமும் ஒன்றோடு ஒன்றாக பின்னிப்  பிணைந்துள்ளது” என்றார். “தொழில்முறை நோயால் அதிகம்  பாதிக்கப்படுபவர்கள் பெண் தொழிலா ளர்களாக உள்ளனர். 3டி எனப்படக்கூடிய ஹவூஸ் கீப்பிங் எனும் அழுக்குப் பிடித்த  வேலை (டர்ட்டி), ஆபத்தான பணிகள் (டேஞ்சரஸ்), பொருளற்ற உழைப்பாக உள்ள ஈவன்ட் மேனேஜ்மென்ட் (டிமீ னிங்) ஆகியவற்றில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது; சுரண்டலும் அதிகமாக நடக்கிறது. சோச லிச சமூகத்தில் சுரண்டல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்” என்று குறிப்பிட்ட  அவர், “பெண்களுக்கு முழுமையான விடுதலை என்பது சோசலிச சமூகத்தில்  தான் கிடைக்கும் என்பதை நூலாசிரியர் வலுவாக பதிவு செய்துள்ளார்” என்றும்  அவர் கூறினார்.

சீற்றம்

பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகையில், “சீற்றம் இல்லா மல் சமூகப் பணி செய்ய முடியாது. நர்ம தாவின் எழுத்துக்களில் அறச்சீற்றம் உள்  ளது. மிகப்பெரிய படைப்பாக இந்த நூல்  வந்துள்ளது. அடுத்தடுத்து மேலும் பல படைப்புகள் வர வேண்டும் என்றார். இந்நிகழ்வை மொழிப்பெயர்ப்பாளர் கி.ரமேஷ் ஒருங்கிணைந்ததார். நூலா சிரியர் நர்மதாதேவி ஏற்புரையாற்றினார். முன்னதாக பாரதி புத்தகாலய ஊழியர் ஜெயசீலி வரவேற்றார். தொகுப்பு: செ.கவாஸ்கர்



 

;