tamilnadu

img

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தங்களை கைவிடுக! கம்பத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, செப்.25- ஒன்றிய அரசின் சாலை பாதுகாப்பு மசோதா மோட்டார் வாகனச் சட்ட திருத்  தங்களை கைவிட கோரியும் மேற்படி  சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத் தக் கூடாது என்று வலியுறுத்தியும் கம்  பத்தில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மானிய விலையில் ஒரு ஆட்டோ வுக்கு ஐந்து லிட்டர் டீசல் தினமும் வழங்க வேண்டும். இ எஸ் ஐ காப்பீடு செய்து தர வேண்டும் அரசின் தொகுப்பு வீடுகளின் ஆட்டோ  தொழிலாளிக்கும் வீடுகள் ஒதுக்கித்தர வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலை வர் பாலகுருநாதன் தலைமை வகித் தார். துவக்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலைவர் ஜெயபாண்டி பேசினார். போராட் டத்தை ஆதரித்து  கம்பம் சிஐடியு ஏரியா செயலாளர் மோகன் , கம்பம் ஏரியா சிஐ டியு ஆட்டோ சங்க தலைவர்  லெனின்  ஆகியோர் பேசினர் . ஆட்டோ சங்க  மாவட்ட செயலாளர் ஏ  முருகவேல் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத் தில்  நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழி  லாளர்கள் பங்கேற்றனர்.

;