tamilnadu

img

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கிய நிவாரணம் மிகவும் சொற்பம்

தீண்டாமை ஒழிப்பு  முன்னணி புகார்

மதுரை, ஜூன் 9- மதுரை திருமோகூர் காளமேக பெரு மாள் கோவில் திருவிழா  நிகழ்ச்சியின் போது  சாதி ஆதிக்கச்சக்தியினரால் தாக்குதலுக்கு உள்ளான பட்டியல் சமூக மக்களை  தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் ஜூன் 8அன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கடந்த ஜுன் 2 ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் திருவிழா நிகழ்ச்சியின் போது பட்டியல் சமூக  மக்களின் குடியிருப்பு பகுதியான நொண்டி கோவில் தெருவில்  நுழைந்த சாதி ஆதிக்கச் சக்தியினர் நடத்திய தாக்குதலில் 36 இரு சக்கர வாகனங்கள்,கார்கள், வீடுகள், சேத மடைந்தன. மேலும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த  செல்வகுமார் (32), மணிமுத்து  (32),  குமார் பிளம்பர் (39), பழனிக்குமார் (35) ஆகி யோர் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாநிலப் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஜூன் 8 அன்று திருமோகூர் கிராமத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சந்திப்பின் போது 68 வயதான முதியவர் கோடாங்கி என்ற கிராம தலையாரி  கூறுகையில், என் வாழ்நாளில் இது  போன்ற தாக்குதல்களை நான் சந்தித்தது இல்லை. என்னை தாக்கியவர்களுக்கு அவர்கள் சிறுபிள்ளைகளாக  இருக்கும் போது  நான்  தலையாரி என்ற முறையில் பல உதவி களை செய்திருக்கிறேன். அந்த நன்றி கூட  இல்லாமல் என்னை கம்பியால் தாக்கி ரத்தக் காயம் ஏற்படுத்தினர் என்று தெரிவித்தார். இதே  போல் பெண்களும் குழந்தைகளும் மிகவும் பதற்றமான சூழ்நிலையில் வாழ்வதாக தங்களது மனக்குமுறலை தெரிவித்தனர்

அப்போது அந்த மக்களிடம் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், தற்போது அரசு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கிய நிவாரணம் ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. மிகவும் குறைவான தொகை யாகும்.  முறையான விசாரணை நடத்தி இதை  கூடுதலாக பெறுவதற்கான ஏற்பாடு செய்வோம், நீதிமன்றம் மூலமாகவும் நடவடிக்கைக்கு செல்வோம், குற்றவாளிகள் அனைவரையும் விரைவில் கைது செய்து  உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்து வோம் என்று தெரிவித்தார்.   இந்த சந்திப்பின்போது தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக் கண்ணு, மாநிலச்செயலாளர் ம.பாலசுப்பிர மணியன், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் செ. ஆஞ்சி,மாவட்ட செயலாளர் செ.முத்து ராணி, பொருளாளர் மகாலிங்கம்,  மாநிலக்குழு உறுப்பினர்கள் என். பி.ரமேஷ்கண்ணன், சுரேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா, கிழக்கு ஒன்றிய செயலாளர்  மு.கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். மாயாண்டி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகர், கே.மலர் ஆகியோர் உடனிருந்தனர்.

;