வட்டார விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வானவர்களுக்கு பாராட்டு விழா
தஞ்சாவூர், அக். 27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில், வட்டார அளவில் தேர்வு பெற்று, மாநில அளவிலான போட்டிகளுக்கு பங்கேற்கச் செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு, பேராவூரணி கெயின் கார்மெண்ட்ஸ் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கெயின் கார்மெண்ட்ஸ் நிறுவனர், உடற்பயிற்சி ஆசிரியர் நீலகண்டன் தலைமை வகித்தார். நிகழ்வில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்வில், தடகளம், வட்டு எறிதல் மற்றும் இறகு பந்து போட்டி போன்றவற்றில் வட்டார மற்றும் மண்டல அளவில் வெற்றி பெற்று, மாநில அளவில் விளையாட தேர்ச்சி பெற்ற பேராவூரணி பகுதியைச் சார்ந்த 12 வீரர் மற்றும் வீராங்கனைகள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டு, பேராவூரணி கெயின் கார்மெண்ட்ஸ் தொடங்கி, மினி பாலா விழா அரங்கத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். முன்னதாக, கெயின் கார்மெண்ட்ஸ் மு.நீலகண்டன் வரவேற்க, உடற்கல்வி ஆசிரியர் சோலை நன்றி கூறினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கெயின் கார்மெண்ட்ஸ் நிறுவனர் உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன், மு.நீலகண்டன், அருண் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
