சென்னை, பிப். 5 - நீட் விலக்கு மசோதா தொடர்பாக செவ்வாயன்று (பிப்.8) தமிழக சட்டப் பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். நீட் விலக்கு கோரும் சட்ட மசோ தாவை பிப்.1 அன்று ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று (பிப்.5) முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தலைமை செயலகத்தில் நடை பெற்றது. இந்த கூட்டத்தில், சட்ட மன்ற சிறப்புக்கூட்டம் நடத்தி, நீட் சட்ட மசோதாவை மீண்டும் நிறை வேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அனைத்து க்கட்சி கூட்டத்தை அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் புறக்க ணித்தன. இந்நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிப்.8ந் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறும். தலைமைச் செயலகத்தி லுள்ள சட்டமன்றப் பேரவை மண்ட பத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது. மக்கள் நலன் சார்ந்து மாணவர் நலனுக்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் நல்லதே நடக்கும். கூட்டத்தொடருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கம் போல் கொரோனா பரிசோதனை செய்து அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் கூறினார்.