tamilnadu

img

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழா

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார். இதில் இளமைக்கால புகைப்படங்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனான புகைப்படங்கள், பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் உள்ளிடோர்களுடனான புகைப்படங்கள், பேராசிரியர் அமைச்சராக பதவியேற்ற நிகழ்வுகள், பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர் மகன் அ. அன்புச்செல்வன், பேரன் அ. வெற்றியழகன் எம்எல்ஏ, குடும்பத்தினர் புகைப்படக் கண்காட்சி ஏற்பாட்டாளர் கோவை சுப்பு ஆகியோர் உடனிருந்தனர்.