tamilnadu

img

டிச.21 - தமிழகத்தில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, டிச.7 தலைநகர் தில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறை வேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன  ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறி வித்துள்ளது. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில பொதுக்குழுக்கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பால கிருஷ்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில வழிகாட்டும் குழு உறுப்பினர்கள் பெ.சண்முகம், பி.எஸ்.மாசிலாமணி, பசுமை வளவன், காளி யப்பன், சாமி.நடராஜன், மேரி லில்லி பாய், போஸ், அமிர்தலிங்கம், காளி ராஜ் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கடந்த நவ.19 அன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறு வதாக பிரதமர் மோடி அறிவித்ததோடு, நடந்துகொண்டிருக்கின்ற நாடாளு மன்ற முதல் கூட்டத்தொடரிலேயே சட்ட த்தை திரும்பப்பெறுவதற்கான மசோதா வை தாக்கல் செய்து சட்டமாக்கி அர சிதழில் வெளியிட்டுள்ளதை விவசாயி கள் ஐக்கிய முன்னணி மாநில பொதுக்குழு வரவேற்கிறது. அதே நேரத்தில் போராட்டம் தொடங்கிய நாளில் முன்வைக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட அங்கீகாரம், மின்சார திருத்த மசோதா 2020 குறித்து எதுவும் தெரி விக்காததை பொதுக்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது. மேலும், நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப் படவுள்ளதாக பட்டியலிடப்பட்ட மசோதாக்களில் மின்சார சட்டத்திருத்த மசோதா இடம்பெற்றிருப்பதை பொதுக்குழு வன்மையாகக் கண்டிக் கிறது. இக்கோரிக்கையோடு மீதமுள்ள  5 கோரிக்கைகளையும் பிரதமர் கூறியபடி அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் 5 பேர்கொண்ட குழுவோடு உடனடியாக பேசி தீர்வுகாண வேண்டும்.

இக்கோரிக்கைகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு வருகின்ற டிசம்பர் 21 அன்று தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் அதிகமான இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், விவ சாயிகளின் போராட்டத்தை கொச்சைப் படுத்தி கார்ட்டூன் வெளியிட்ட துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கும் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேற்கண்ட தீர்மானங்களை விளக்கி செய்தியாளர்களிடம் பேசிய கூட்ட மைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் மேலும் தெரி விக்கையில், தமிழக அரசு அறி வித்துள்ள இழப்பீடு மற்றும் கணக் கெடுப்பு போதுமானதாக இல்லை, ஒரு  ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கேட்டோம். ஆனால் தமிழக அரசு ஒரு எக்டருக்கு ரூ.20,000 அறிவித்துள்ளது. இது போதுமானதாக இல்லை.; பருவ மழையால் விவசாயம் மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ளது. தற்போது வரை மழை ஓய்ந்தபாடாக இல்லை, நிவாரணத்தை அரசிடமிருந்து கூடுத லாக பெறுவதற்கு என்னென்ன வகை யில் போராட்டங்கள் செய்வது குறித்தும் ஆலோசித்து முடிவெடுக்கப் படும் என்றார்.

;