tamilnadu

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு காப்பீடு அவசியம் மதுரை ஆட்சியர் வலியுறுத்தல்

மதுரை, ஜன.1- மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்து வது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலை வர் டி.ஜி.வினய் தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பா ளர் மணிவண்ணன், சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் மாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது:- அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக் கட்டு அரசு விதிகளின்படி நடத்துவதற்கு அமைப்பாளர்கள் முன் அனுமதியை ஆட்சியரிடம் பெற வேண்டும்.   ஜல்லிக்கட்டின் போது நடைபெறும் அனைத்து நிகழ்விற்கும் தாங்களே பொறுப்பு என்ற உறுதிமொழி, முழு நிகழ்வும் தேசியமயமாக்கப்பட்ட நிறு வனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ள தற்கான ஆவணம் ஆகியவற்றை விழாக்குழு சமர்ப்பிக்க வேண்டும்.  ஜல்லிகட்டில் அனுமதிக்கப்படவுள்ள அதிகபட்ச காளைகளின் எண்ணிக்கை, பங்கேற்க எதிர்பார்க்கப்படும் காளை களின் உத்தேசப் பட்டியலை விண் ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.   பங்கேற்கும் காளைகள் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளால் உரிய சோதனைக்கு உட்படுத்தப்படு வதையும், செயல்திறன் அதிகரிக்கும் மருந்துகள், எரிச்சலூட்டும் பொருட் கள் போன்றவை எந்த வடிவத்திலும் காளைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்பதையும் விழாக்குழு உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் பங் கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு எதிர்பா ராதவிதமாக ஏற்படும் காயங்களுக்கு உரிய  சிகிச்சை அளிப்பதற்கு போது மான மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் மற்றும் 108 வாகனம் ஆகிய வற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.  விதிமீறல்களைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பாதுகாப்பு கேமராக்கள் அல்லது வெப் கேமராக்கள் வாடிவாசல் உள்ளிட்ட அரங்கின் முக்கிய இடங்களில் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

;