tamilnadu

img

முகப் பதிவு முறையை எதிர்த்து அங்கன்வாடி ஊழியர் சங்கம் போராட்டம்

முகப் பதிவு முறையை எதிர்த்து  அங்கன்வாடி ஊழியர் சங்கம் போராட்டம்

வு (பேஸ் கேப்சர்) முறையை எதிர்த்து மார்ச் 1 முதல் போராட்டம் மற்றும் மார்ச் 4-இல்  மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம்  முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்  உதவியாளர் சங்கத்தின் மாநில செயற்குழுக்  கூட்டம் பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சங்கம் சார்பில் மேலப்பொன்ன கரம் சிஐடியு மாவட்டக் குழு அலுவல கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பில் பேசிய அகில இந்திய செய லாளர் ஏ.ஆர். சிந்து மற்றும் மாநில பொதுச்  செயலாளர் டி.டெய்சி ஆகியோர், “ஒன்றிய  அரசின் கொள்கை முடிவின்படி, மார்ச் 1  முதல் இணை உணவு பெறும் கர்ப்பிணிப்  பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின்  முக அசைவு புகைப்படம் எடுத்து, அவர்க ளின் செல்போனுக்கு ஓடிபி அனுப்பப்பட்ட  பின்னரே இணை உணவு வழங்க முடி யும் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது மிகவும் சிரமத்தை ஏற்ப டுத்தும் நடைமுறை” என்றனர். “தினசரி 150 கிராம் ஊட்டச்சத்து மாவு  மற்றும் வாரத்திற்கு 3 முறை முட்டை பெற  இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்பது  தாய்மார்களை 2-3 மணி நேரம் காத்திருக்க வைக்கும் செயல். அங்கன்வாடி மையங்க ளில் பணியாற்றும் ஊழியர்களும் ஒரே நாளில் இத்தனை பேருக்கு இந்த நடை முறையை பின்பற்ற முடியாது. எனவே மார்ச்  1 முதல் இந்த முறையை எதிர்த்து போராட் டம் நடத்துவோம்” என்று தெரிவித்தனர்.

பிற கோரிக்கைகள்

மேலும், அங்கன்வாடி ஊழியர்கள் குறித்த  பிற கோரிக்கைகளையும் முன்வைத்தனர்: அங்கன்வாடி ஊழியர்களுக்கு 10  ஆண்டுகளுக்குள் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் 2024-ஆம் ஆண்டிற்கான  பதவி உயர்வுகள் இதுவரை வழங்கப்பட வில்லை. தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்  மற்றும் உதவியாளர் பணியிடங்களில் 25 சதவீதம் காலியாக உள்ளது. இந்தியா முழு வதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்  பணியிடங்கள் உள்ள நிலையில், ஒரு ஊழியர் 2-3 மையங்களைப் பார்க்கும் நிலை  தொடர்கிறது. 2023 ஆம் ஆண்டு போராட்டத்தின் விளை வாக 15 நாள் கோடை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இதை ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு புதிய செல்போன் கள் வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக் கைகளை வலியுறுத்தி, மார்ச் 4 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பில், சங்கத்தின் மாநிலத் தலைவர் ரத்தினமாலா, பொருளா ளர் எஸ். தேவமணி, மாவட்டச் செயலாளர் வரதலட்சுமி, மாவட்ட பொருளாளர் ரமேஷ்வரி  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.