tamilnadu

img

மாவட்ட அளவில் சாதனை படைத்த வாலிபர் சங்க சிலம்பப் பள்ளி மாணவர்கள்....

மதுரை மாவட்ட சிலம்பக் கழகம்சார்பாக மாவட்ட அளவிலானசிலம்பப் போட்டி ஜன 24, 25 - 2021 ஆகியதேதிகளில் நடைபெற்றது. 24 அணிகளை சார்ந்த 900 வீரர்கள் பல்வேறு எடைபிரிவுகளில்  களத்தில் மோதிகொண்ட னர். அதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சிலம்ப பயிற்சி பள்ளி சார்பாக 72 பேர் பங்கேற்றனர். 72 வீரர்களில் 61 பேர்ளைபரிசுக வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  சாதாரண குடும்ப பின்புலத்தை கொண்ட வாலிபர் சங்க விளையாட்டு கழக மாணவர்கள் 18 முதல் பரிசுகளை வென்றதும் மிக முக்கியமானது.

போட்டிக்கு மறுநாள் நிச்சயதார்த்த நிகழ்ச்சி (பிப் 25 திருமணம் ) இருந்த பொழுதும் உற்சாகத்துடன் போட்டியில்பங்கேற்ற இராஜலட்சுமி என்கிற எம்சிஏபட்டதாரி முதல் பரிசுடன் சென்றுள்ளார். மாற்றுத்திறனாளி ( காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ) மாணவர் தீபக் தனது எடைபிரிவில் 10 போட்டியாளர்களுடன்  மோதி முதல் பரிசை வென்று பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளார். செல்லூரில் தறி நெய்யும் தாயின் வளர்ப்பில் வளரும் சாலினி, பெத்தானியாபுரத்தில் தையல் தொழில் செய்யும் தாயின் வளர்ப்பில் வளரும் தனிசுயா ஆகிய இருவரும் பரிசுகளை வென்று நம்மை மேலும் உற்சாகபடுத்தினார்கள். இப்படி பரிசுகளை வென்ற பெரும்பாலானவர்கள் அரசு பள்ளி/ கல்லூரி பயிலும் மாணவர்கள் அல்லது மெக்கானிக், கொத்தனார், சில்வர் பட்டறை,சுமைப்பணி என கூலி தொழிலாளி களின் பிள்ளைகள் தான். 

5 ஆண்டிற்கு முன்னர் பெத்தானி யாபுரத்தில் அன்றைய பகுதி / மாவட்ட தோழர்களின் பெரும் முயற்சியால் வெறும் 8 மாணவர்களை கொண்டு துவக்கப்பட்ட சிலம்ப பயிற்சி பள்ளி இன்று வளர்ந்து குறிப்பிட்ட மைல்கல்லை எட்டியிருக்கிறது. பழங்காநத்தம், மீனாம்பாள்புரம் பகுதி தோழர்களின் உழைப்பு கூடுதல் சிறப்பாக அமைந்தது. தற்போது மத்திய பகுதி, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டு சுமார்800 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி   அளித்து வருகிறோம். 

அன்று பயிற்சிக்காக வந்த மாணவர்கள் பலர் அமைப்பின் தலைவர்களாக இன்று மாறி போராட்ட களங்களிலும் சுழன்று வருகிறார்கள். அரசரடிபகுதி குழுவின் செயலாளர், தலைவ ராக தோழர்கள் செந்தில் , ஸ்டீபன் ஆகியோர் செயல்படுகிறார்கள்.பணம் கொடுத்து பொழுதுபோக்கிற்காக சிலர் கற்றுக்கொள்கிறார்கள்.  தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை உழைப்பாளி வீட்டு பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்கும் வரலாற்றுப் பணியை வாலிபர்  சங்கம் செய்து வருகிறது. இயல்பாகவே தனித்த அழகு நம் குழந்தைகளிடம் வெளிப்படுகிறது. மாணவர்களின் வெற்றி, அவர்களுடைய சேவைப்பணியில் வாலிபர் சங்க  பயிற்சியாளர்கள் தன்னலமின்றி செயல்பட்டு வருகிறார்கள். வடிவேல் , சரவணன், ரவி, அப்துல்லா , தீபக் , செல்வேந்திரன், பிரசாந்த் ஆகியோரது பணி மிகவும் பாராட்டுக்குரியது . 

வாலிபர் சங்க பகுதிக்குழு தோழர்கள், இடம் கொடுத்தோர், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மற்றும் பல்வேறு உதவி செய்தவர்கள் என  கூட்டு உழைப்பில் மலர்ந்தது தான் இச்சிலம்ப பயிற்சி பள்ளி. இப்பயிற்சி பள்ளி இன்னும் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தங்களுடைய கிளை தொடங்கிட ஊக்கப்படுத்தி பாராட்டிடுவோம்.

டி. செல்வராஜ்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்
 

;