சென்னை, மார்ச் 20- பட்டியல் சாதி/ பழங்குடியினர் துணைத் திட்டத்தின் முறையான அம லாக்கத்தை உறுதி செய்திட சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொ துச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
தொடர்ந்த மீறல்கள்
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அளவிலும், மாநில அளவிலும் பட்டியல் சாதி, ஆனாலும் அதன் வழி காட்டல் நெறி முறைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் கூட தமிழ்நாட்டில் இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட தொகையில் 5000 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டவில்லை என்பது கசப்பான உண்மை. நிதி ஒதுக்கீடு, ஒதுக்கீடு விகிதம், ஒதுக்கீடுகள் மடை மாற்றம், வகுபடு (Divisible) செல வினங்களின் விகிதம் சரிவு, பொருத்த மான புதிய திட்டங்கள் இல்லாமை, திட்ட அமலாக்கம் குறித்த கண் காணிப்பு முறைமையின் பலவீனம், அதிகாரமற்ற முகமை அமைச்சகம், துணைத் திட்ட அமலாக்கம் குறித்த இலக்குகளை தீர்மானிப்பதற்கான அமைப்பும், அதிகார அடுக்குகளில் பொறுப்புகள் நிர்ணயிக்கப்பட்டு மீறல்கள் மீதான நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஏற்பாடுகளும் இல் லாமை, நிதியாண்டின் இடையிலேயே உரிய இடைவெளிகளில் பரிசீலித்து நிதி முழுமையாக பயன்படுத்துவதையும், மறு ஒதுக்கீடு செய்வதையும் உறுதி செய்ய ஏற்பாடுகள் இல்லாமை உள்ளிட்ட பிரச்சனைகள் துணைத் திட்ட அமலாக்கத்தை நீர்க்கச் செய்து வந்துள்ளன.
நீண்ட கால கோரிக்கை
பட்டியல் சாதி, பழங்குடி துணைத் திட்ட அமலாக்கத்தை உறுதி செய்ய சிறப்புச் சட்டம் இயற்றப்படுவதே இப் பிரச்சனைகளுக்கான தீர்வு என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. இத்தகைய சிறப்புச் சட்டம் ஏற்கெனவே ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநி லங்களில் இருப்பதையும் சுட்டிக் காட்டி யும் வந்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2008 இல் சென்னை கருத்த ரங்கம், 2009 இல் பேரணி, 2010 - கோரிக்கை சாசன உருவாக்க கலந்துரை யாடல், 2011 இல் சென்னையில் சிறப்பு மாநாடு - ‘‘பட்டியல் சாதி மக்களின் பங்கைக் கொடு’’ பிரசுரம் வெளியீடு, 2021 இல் சட்டமன்ற தேர்தல் கோரிக்கை சாசனம் என தொடர்ந்து பட்டியல் சாதி, பழங்குடி துணைத் திட்ட அமலாக் கத்தை வலியுறுத்தியும், வலுப்படுத்த வும், சிறப்புச் சட்டம் கோரியும் தொடர் இயக்கங்களை நடத்தி வந்துள்ளது.
துணைத் திட்ட அமலாக்கத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் தீர்வு காண்கிற வகையில் வலுவான சட்டமாக அது அமைய வேண்டும். அதே நேரத்தில் கடந்த ஆண்டு களில் செலவிடப்படாத துணைத் திட்ட நிதியினை சேர்த்து இவ்வாண்டு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். சாதி மறுப்பு தம்பதிகளை பாதுகாக்கவும், சாதி ஆணவப் படுகொலைகளைக் தடுக்கவும் சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். மிக முக்கியமாக மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட துப்புரவு பொறியியல் துறையை உருவாக்கிட வேண்டும். அதே போல் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள மதுரை, கோவை, திருச்சி, நீலகிரி ஆகிய நகரங்களில் புதிய விடுதி கள், அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர் ஆக மாற்றும் திட்டம், புதிரை வண்ணார் நல வாரி யத்திற்கு புத்துயிர் அளித்து செயலாக்கு தல், அயோத்தி தாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் போன்ற அறிவிப்புகளையும் வரவேற்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.