tamilnadu

img

சாதி மறுப்பு திருமண படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும்

சாதி மறுப்பு திருமண படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் வேண்டும்

கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

கடலூர், ஆக.11 - தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இவற்றைத் தடுக்க  தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். கடலூரில் திங்களன்று செய்தியாளர் களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், கடலூர் மாவட்டத்தில் 2003ல் நடைபெற்ற கண்ணகி-முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கை உதாரணமாகக் காட்டி, “இந்தக் கொலை தமிழ கத்தையே உலுக்கியது. நீதிமன்றமும் அனை வருக்கும் தண்டனை வழங்கியது. ஆனாலும் தமிழகத்தில் இது போன்ற படுகொலைகள் நிறுத்தப்படவில்லை” என வேதனையுடன் தெரிவித்தார். உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்புகள், வழிகாட்டுதல்கள் இருந்தபோதி லும் காவல்துறை மெத்தனமாக செயல்படுவ தாக அவர் குற்றம் சாட்டினார். சூரியகுமார் படுகொலை கடலூர் மாவட்டம் அரசகுடி கிராமத்தைச் சேர்ந்த சூரியகுமார் என்ற மாணவரின் சந்தே கத்திற்குரிய மரணம் குறித்து பேசிய அவர், இது  ஆணவக் கொலை என்றும், தனது மகன் வேறு  சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து  வருவதால்தான் இந்த கொலை நடைபெற்று உள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றத் தில் சூரியகுமாரின் தந்தை வழக்குத் தொடுத்து உள்ளார் என்றும் தெரிவித்தார். நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விட்ட நிலையில், காவல்துறை முறையாக விசா ரணை நடத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். சாதி ஆணவக் கொலைகளில் சம்பந்தப் பட்டவர்கள் தப்பிவிடாமல் இருக்கவும், ஆண வக் கொலைகளைத் தடுக்கவும் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்த பாலகிருஷ்ணன், சமீபத்தில் முதல மைச்சரைச் சந்தித்து இந்த விவகாரத்தில் வலி யுறுத்தியதையும் சுட்டிக்காட்டினார். தேர்தல் முறைகேடுகள் மீதான விமர்சனம் தேர்தலில் பாஜக முறைகேடு நடத்தியதாக வும், போலி வாக்காளர்கள் மூலம் வெற்றி  பெற்றதாகவும் நாடு முழுவதும் விவாதமாகி யுள்ளதாக பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டி னார். தேர்தல் ஆணையமே பதில் சொல்ல முடி யாத நிலையில் உள்ளதாக அவர் கூறினார். வாக்காளர் திருத்தத் திட்டம் தமிழ்நாட்டி லும் 2026ல் வர உள்ளதாகக் கூறிய பால கிருஷ்ணன், “அப்போது எவ்வளவு பேருடைய வாக்குகள் பறிபோகும் என்று தெரியாது” என கவலை தெரிவித்தார். அதிமுக மீதான விமர்சனம் பாஜக செய்வதற்கெல்லாம் ஆதரவு தரும் பழனிசாமியாக மாறியுள்ளதாக விமர்சித்த பாலகிருஷ்ணன், “சொந்த அடையாளத்தை இழந்து நிற்கும் ஒரே கட்சி தமிழகத்தில் அதிமுக தான்” என்று கூறினார். சென்னையில் துப்புரவுப் பணியாளர்கள் பத்து நாட்களாக போராடி வருவதாகக் கூறிய அவர், “தூய்மைப் பணி ஒப்பந்தத்தைத் தனி யாரிடம் ஒப்படைப்பது மிகப் பெரிய சமூகச் சீர்கேடு” என்று குறிப்பிட்டார். புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போராட்டத்தின் விளைவாகத்தான் அரசுப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டதாகக் கூறிய பாலகிருஷ்ணன், “இன்று அந்தப் பல்கலைக்கழகம் சீரழிந்து போய்விட்டது” என்று வேதனை தெரிவித்தார். நீர்நிலை புறம்போக்கில் உள்ளவர்களின் ஆயிரக்கணக்கான வீடுகளை சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடித்து அகதிகளாக மாற்றி யுள்ளதாகக் கூறிய அவர், அடுக்குமாடிக் குடி யிருப்பு கட்டித்தருவோம் என்ற அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ வாக்குறுதி இரண்டு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்தப் பேட்டியின்போது மாவட்டச் செயலா ளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.சுப்புராயன், ஆர்.அமர்நாத், ஜே. ராஜேஷ்கண்ணன், பி.கருப்பையன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.