tamilnadu

img

அரசுப் பள்ளிக்கு ரூ.3 லட்சம் வழங்கிய ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர்

தஞ்சாவூர், ஜூன் 3-  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் அர.தங்கராசன் (80). இவர் நாகை - திருவாரூர் மாவட்ட  மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி அருகே உள்ள நடுவிக் குறிச்சியை பூர்வீகமாகக் கொண்ட தங்கராசன், 1 ஆம் வகுப்பு முதல் 5  ஆம் வகுப்பு வரை, நடுவிக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றுள் ளார். இதனைத் தொடர்ந்து, பேரா வூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு படித்து விட்டு, காரைக் குடி அழகப்பா கல்லூரியில் பி.யூ.சி முடித்துள்ளார்.  பின்னர் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில், பொறி யியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு, மின்வாரியத்தில் பணியில் சேர்ந்த அவர், பல்வேறு இடங்களில், பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி தனது 58 ஆவது வயதில் நாகை - திருவாரூர் மின்வாரிய கூடுதல் தலைமை பொறி யாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இந்நிலையில், தான் படித்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில், ரூ.1 லட்சத்தை பேராவூரணியில் உள்ள தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையில் பணம் செலுத்தி, அதில் வரும் வட்டியைக் கொண்டு, நடுவிக்குறிச்சி பள்ளி தலைமை ஆசிரியர் கணக்கில் அந்த வட்டி பணம் சேருமாறு ஏற்பாடு செய்து,

10-ஆம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறும் மாணவர்களுக்கு பிரித்து ரொக்கப் பரிசு வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.  அதேபோல், ரூ.2 லட்சத்தை வங்கி நிரந்தர வைப்பு தொகையில் செலுத்தி, அதில் கிடைக்கும் வட்டிப் பணத்தில், தலைமையாசிரியர் மூலமாக அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெறும் மாணவர்க ளுக்கும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பரிசுகளை பிரித்து வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.  இதுகுறித்து, தங்கராசன் கூறுகை யில், ‘‘நான் படித்த பள்ளி, படிக்க வைத்த அப்பா, அம்மா, அம்மாச்சி, ஆசிரியர்களை கௌரவிக்கும் வித மாக இந்த ஏற்பாட்டை செய்துள்ளேன்.  எனக்கு பிறகும் இது தொடர்ந்து நடை பெற வேண்டும் என எனது மகள் மலர்விழியை வாரிசாக நியமித்து உள்ளேன்’’ என்றார்.  ஓய்வுபெற்ற மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளரின் இந்த செயலுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரி வித்துள்ளனர்.  இவருக்கு த.கல்யாணி (71) என்ற மனைவியும், மலர்விழி ரமேஷ், பாரதி ஸ்ரீதர், மருத்துவர் கவிதா பரசு ராமன் ஆகிய 3 மகள்களும் உள்ளனர். தங்கராசன் தனது மனைவி கல்யாணி யுடன் தற்போது தஞ்சையில் வசித்து வருகிறார்.

;