tamilnadu

img

‘தடகள விளையாட்டுகளில் சாதனை படைக்கும் அரசுப் பள்ளி மாணவர்’

“அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் எல்லாம்  சாதி க்கமாட்டார்கள் என்ற தவறான கூற்று அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் படைக்கும் சாதனைகளால் தொடர்ந்து தவிடு, பொடியாகி வருகிறது.  போதுமான ஆசிரியர்கள், வகுப் பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், கழிப்பறை வசதிகள் இல்லாத அரசுப் பள்ளிக்கூடங்கள் பெருமளவில் இருந்தாலும், அவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளின் சாதனைகள் பெரிதாக வெளியே தெரிவதில்லை.  இதேபோலதான் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சங்கரன்பந்தலில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருபவர் திருவிளையாட்டம் கிராமத்தை சேர்ந்த ஜவகர்-சாந்தி தம்பதியினரின் மகனான கிஷோர். இவர், மைதானமே இல்லாத அப்பள்ளியில் படித்துக்கொண்டு தடகள போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வருகிறார்.  6 ஆம் வகுப்பு படிக்கும் போதி லிருந்து விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்று பரிசுகளை பெற்று வந்த கிஷோர். தான் ஏற்கனவே 10 ஆம்  வகுப்பு வரை  பயின்ற திருவிளை யாட்டம் சௌரிராசன் உயர்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் களான விஜயராகவன், முத்துக்குமார் ஆகியோரின் ஊக்கத்தினாலும், பயிற்சியாலும் தொடர்ந்து  தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்திருக்கிறார்.   குறிப்பாக, 2016-17இல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய கோ-கோ போட்டியிலும், 2018-19இல் நாகப்பட்டினத்தில் நடந்த உலகத்திறனாய்வு உடல் திறன்  தேர்வு போட்டியில் உயரம் தாண்டுத லில் முதலிடம் பெற்று தகுதி பெற்று  திருவாரூரில் நடைபெற்ற மண்டல அள விலான அரை இறுதிப் போட்டியில் பங்கேற்று நான்காமிடம் பெற்றார். 

இதேபோல், 2019-20 கல்வி யாண்டில் மாவட்ட அளவில் நடை பெற்ற 200 மீ /400 மீ ஓட்டங்கள், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறி தல் ஆகியவற்றில் முதலிடம்பெற்ற தோடு, கபடி போட்டியிலும் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளார்.  மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை சாய் விளையாட்டு மையத்தில் நடத்திய உயரம் தாண்டுதலில் முத லிடமும் பெற்றுள்ளார். பல்வேறு அமைப்புகள் நடத்திய போட்டிகளி லும் ஆர்வமுடன் பங்கேற்று சாதித் துள்ள கிஷோர் சௌரிராசன் உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு  படித்து முடிக்கும் வரை பள்ளி சாம்பி யனாக தொடர்ந்து இருந்துள்ளார்.  பின்னர் 11-ஆம் வகுப்பு சங்கரன் பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்த பிறகும் அப்பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர்கள் பிரபாகரன், வீர மணி ஆகியோரின் தன்னம்பிக்கை தரும் பயிற்சியால் தனது சாதனையை தக்கவைத்து அனைத்து போட்டி களிலும் பங்கேற்று வெற்றி பெற்று சாதித்து வருகிறார்.  2022-23 ஆண்டிற்கான மண்டல அள வில் சீர்காழியில் நடைபெற்ற பாரதி யார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டியில் உயரம், அகலம் தாண்டுதலில் இரண்டாமிடமும் வென்றுள்ளார். மேலும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நடத்திய தேசிய சேவை குழுமத்துடன் இணைந்து சேவை சான்றிதழ் பெற்றுள்ளார்.  மாவட்ட அளவில் நடத்தப்பட்ட முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் உயரம் தாண்டுதல், நீச்சல் போட்டி களில் முதலிடம் பிடித்து மாநில  அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். 

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அவர் பயிலும் பள்ளி யில் விளையாட்டு மைதானம் இல்லாத தால் தன்னால் இன்னும் கூடுதலாக பயிற்சி பெறமுடியவில்லை என மாணவர் கிஷோர் கூறுகிறார்.  மேலும் தன்னை போன்ற பல மாணவ, மாணவிகள் விளையாட்டில் அதீத ஈடுபாட்டுடன் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர். அவர்களும் பயிற்சி பெற்று சாதிக்க தங்கள் பள்ளியில் விளையாட்டு மைதானத்தை முறையாக அமைத்து கொடுத்தால் நிச்சயமாக நிறைய பேர் சாதிப்பார்கள் என்றும் கூறுகிறார்.  இதனிடையே தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய தடகள வீரர்களுக்கான பயிற்சி முகா மில் தேர்ச்சி பெற்று மயிலாடுதுறை ராஜன் தோட்டத்திலுள்ள சாய் பயிற்சி  மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்.  விளையாட்டு போட்டிகளை நடத்த அரசு பல்வேறு திட்டங்களை வகுப் பதைப்போல, அரசுப் பள்ளிகளில்  விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றனவா? என ஆய்வு செய்து பள்ளி மைதானங்களை மேம்படுத்தி  அடிப்படை வசதிகளை கட்டமைத்து பயிற்சியளித்தால் ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் திறமையான விளை யாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.

;