tamilnadu

img

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு : அமைச்சர் அறிவிப்பு

சென்னை,அக்.4- அதிக கொழுப்பு மற்றும் இதர சத்து ள்ள பாலுக்கான கொள்முதல் விலை யை உயர்த்தி  வழங்க ஆவின்முடிவு செய்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டி ருக்கும் அறிக்கை வருமாறு:- தொடக்க பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியா ளர்களுக்கு பாலில் உள்ள கொழுப்பு மற்றும் இதர சத்துக்கள் அடிப்படை யில் கொள்முதல் விலை அதிகபட்ச மாக கொழுப்பு 5.9 சதவீதம் மற்றும் இதர சத்துக்கள் 9.0 சதவீதம் உள்ள பாலுக்கு ரூ.40.95 வரை வழங்கப்பட்டு வந்தது. தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் ஊற்றும் சில உறுப்பினர்கள் பால் மாதிரிகளை சோதனை செய்தபோது அதில் 6 விழுக்காட்டுக்கும் மேல் கொழுப்பு சத்து இருந்தது தெரியவந்தது.   அதிக கொழுப்புச் சத்துள்ள பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து தற்போது உச்சபட்சமாக வழங்கப்பட்டு வந்த விலையை தரத்திற்கு ஏற்ப பிரித்து 6.0, 6.1, 6.2, 7.5 என தரப்பட்டியல் உயர்த்தி உச்சபட்சமாக 7.5  விழுக்காடு வரை பால் கொள்முதல் விலை பட்டியல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் அதிக கொழுப்புச் சத்துள்ள பாலுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   தரமான பால் உற்பத்தி செய்து வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 ஊக்கத் தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.