tamilnadu

img

சிறுவன் வயிற்றிலிருந்து 5 மி.மீ, நீளமுள்ள ஸ்குரு அகற்றம்.... மதுரை அரசு மருத்துவமனை சாதனை

மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த தேனி ராஜனின் 10 வயதுமகன் கௌதம்  ஜூலை 29-ஆம் தேதிவிளையாடிக் கொண்டிருந்த கௌதம்  சிறிய அளவிலான இரும்பு ஸ்குரு ஒன்றை விழுங்கி விட்டதாக தாயாரிடம் தெரிவித்தார். அருகிலுள்ள அரசு மருத்துவமனையை நாடியபோது  தொந்தரவுஎதுவும் இல்லாததால் தானாகவே வெளியே வந்து விடும் என்று  கூறியுள்ளனர். ஆக.11-ஆம் தேதி கௌதமிற்கு இருமல், காய்ச்சல் இருந்ததால் திண்டுக்கல் மருத்துவமனைக்கு சென்று  பரிசோதனைகள் செய்து பார்த்ததில் ஸ்குரு மூச்சுக் குழாயில் இருப்பதுகண்டறியப்பட்டு அதே நாள் திண்டுக் கல் அரசு மருத்துவமனையில் CT Scanமூலம் உறுதி செய்யப்பட்டது.

காய்ச்சல் மற்றும் இருமல் அதிகமாக இருந்ததால் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆக.14-ஆம் தேதி மருத்துவர் பாலசங்கர் (இயக்குநர், குழந்தைகள் நலப்பிரிவு) டாக்டர் நந்தினி குப்புசாமி (பேராசிரியர் குழந்தைகள் நலப்பிரிவு) தலைமையில் ஸ்குருவை எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. மயக்கவியல்துறை மருத்துவர்கள் செல்வக்குமார், சந்தனக் கண்ணன் உதவியுடன் நுரையீரல் சிகிச்சைப் பிரிவு துறைத்தலைவர் ர.பிரபாகரன் ஆலோசனையின் அடிப்படையில் மருத்துவர் ராஜேஷ்குமார் ஐந்து மி.மீ அளவிலான ஸ்குருவை பிராங்காஸ்கோபி கருவி மூலம் வெளியில் எடுத்தார்.

;