ஒரே ஓவரில் 45 ரன்கள் ; 43 பந்துகளில் 153 ரன்கள்
ருத்ரதாண்டவம் ஆடிய ஆப்கன் வீரர் உஸ்மான் கனி
இங்கிலாந்து நாட்டில் 10 ஓவர்க ளை கொண்ட “இசிஎஸ் டி-10” போட்டிகள் (10 ஓவர் போட்டிகள்) நடைபெற்று வருகின்றன. இந்த தொட ரின் லீக் ஆட்டம் ஒன்றில் லண்டன் கவுண்டி அணியும், கில்ட்போர்டு அணி யும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் எடுத்தது. கேப்டன் உஸ்மான் கனி (ஆப்கானிஸ்தான்) 43 பந்தில் 153 ரன்கள் விளாசி தூள் கிளப்பினார். இதில் 11 பவுண்டரி, 17 சிக்சர்கள் அடங்கும். குறிப்பாக கில்ட்போர்டு பந்துவீச்சாளர் வில் எர்னியின் வீசிய ஒரே ஓவரில் 45 ரன்களை எடுத்து உஸ்மான் கனி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார். அடுத்து விளையாடிய கில்ட்போர்டு அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்து, 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. உஸ்மான் கனி 43 பந்துகளில் 153 ரன்கள் மற்றும் ஒரே ஓவரில் 45 ரன்கள் விளாசியது உலக சாதனை அம்சம் என்றாலும், ஐசிசி-யால் அங்கீகரிக்கப் படாத தொடர் என்பதால் (இசிஎஸ் டி-10) இந்த சாதனை நிகழ்வு வெறும் செய்தி யாக மட்டுமே வலம் வருகிறது.
ஒரே ஓவரில் 45 ரன்கள் எப்படி?
கில்ட்போர்டு பந்துவீச்சாளர் வில் எர்னியின் ஓவரில் உஸ்மான் கனி 45 ரன்கள் விளாசியுள்ளார். இந்த பிரமிக்க வைக்கும் சாதனை ஓவரை பார்க்கலாம்
1. சிக்ஸ் + நோ பால் : 7 ரன்கள் 0. இலவச பந்து (பிரீஹிட்) + சிக்ஸ் : 6 ரன்கள் 0. போர் + வைட் : 5 ரன்கள் 2. 6 ரன்கள் (சிக்ஸ்) : 6 ரன்கள் 3. போர் + நோ பால் : 5 ரன்கள் 0. இலவச பந்து (பிரீஹிட்) + சிக்ஸ் : 6 ரன்கள் 4. 6 ரன்கள் (சிக்ஸ்) : 6 ரன்கள் 5. 0 ரன்கள் 6. போர் : 4 ரன்கள் (0. என்பது கணக்கில் சேர்க்கப்படாத பந்துகள் ஆகும் - நோ பால், வைடு)
இனி வில் எர்னி பந்து வீச மாட்டார்?
கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஓவருக்கு 6 பந்துகள் மட்டுமே வீச வேண்டும். ஆனால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வில் எர்னி மொத்தம் 9 பந்துகள் வீசியுள்ளார். இது பெரிய விஷயம் கிடையாது. கிரிக்கெட் உலகில் ஒரு ஓவரில் 12 பந்துகள் வீசியவர்களும் உள்ளனர். அவர்கள் தோராயமாக 30 ரன்கள் விட்டுக் கொடுத்து இருப்பார்கள். ஆனால் வில் எர்னி 9 பந்துகள் வீசி 45 ரன்களை வாரி வழங்கியுள்ளார். அதுவும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு ரன்கள் வழங்கும் வள்ளலாக ஒரே போட்டியில் புகழ் பெற்றுள்ளார். வரும் காலங்களில் “இசிஎஸ் டி-10” போட்டிகளில் வில் எர்னி அனுமதிக்கப்பட வாய்ப்பு குறைவு தான் என எதிர்பார்க்கப்படுகிறது.