சிதம்பரம் அருகே மணக்குடியான் இருப்பு கிராமத்தைச் சேர்ந்த மோகன்-சத்யா தம்பிகளின் மூத்த மகள் அக்ஷிதா 5 ஆம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது மகள் 4 வயதாகும் அனு ஸ்ரீ அதே பகுதியில் தனியார் பள்ளியில் யுகேஜி கல்வி பயின்று வருகிறார். 3 வயதிலிருந்து கழி மற்றும் கம்பிகளில் இரண்டு கைகளை பிடித்தவாறு தொங்கி சென்றுள்ளார். இதனை குழந்தையின் பெற்றோர்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டுள்ளனர். ஆனால், தொடர்ந்து 5 நிமிடம் 10 நிமிடம் என தொங்கியவாறு செல் வதை பார்த்த பெற்றோர்கள் திகைத்து திறமையை கவனிக்க தொடங்கியுள்ளனர். பிறகு, வீடியோ எடுத்து சோழன்புக் ஆப் வோர்ல்டு ரெக்கார்டு என்ற நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர். இதனைப் பார்த்து வியந்துபோன அந்த நிறுவனத்தினர். சம்பந் தப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் இதே போல் ராணுவத்தில் மங்கிபார் என்ற பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் வீரர்கள் பலர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
எதிரிகளை மரம் மற்றும் கயிறுகளில் நீண்ட தூரம் தொங்கியவாறு சென்று தாக்குவதற்கு இதுபோன்று தனித்திற மையுள்ள வர்கள் அதிகம் தேவைப்படுகி றார்கள். அதேபோல் ஒலிம்பிக்கில் தங்கம் பெறு வதற்கும் இதுபோன்ற போட்டிகள் உள்ளது. என்று வீட்டிலே பயிற்சி கொடுங்கள் என்று கூறி யுள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடந்த 4 மாதங்களாக வீட்டிலே பெற்றோர்கள் பயிற்சி கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிதம்பரம் ராமசாமி மேல் நிலைப்பள்ளியில் குழந்தையின் திறமையை உலக சாதனையாக பதிவு செய்வதற்கு சமதள இரும்பு குழாய் அமைக்கப்பட்டது. இதில் அந்த குழந்தை தொங்கியவாறு 70 மீட்டர் தூரத்தை 87 செகண்டுகளில் கடந்து உலக சாதனையை பதிவு செய்துள்ளது. இதுபோன்ற சாதனையை வேறு யாரும் செய்யவில்லை. இது புதிய முயற்சி என சோழன் புக் ஆப் வேல்டு ரெக்கார்டு பொது முகமையர் பிரபு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைக்கு சாதனை சான்று வழங்கப்பட்டது.