தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி திருவிழாவையொட்டி சனிக்கிழமை, 27 ஆவது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த பரமாச்சாரியாரை பல்லக்கில் அமர வைத்து, மனிதர்கள் தூக்கிச் சுமக்கும் நிகழ்ச்சி நடந்தது. மனிதனை மனிதனே சுமக்கும் இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.