tamilnadu

img

பேரூர் படித்துறையில் 2 டன் உணவுப் பொருட்கள் சேகரிப்பு

பேரூர் படித்துறையில் 2 டன் உணவுப் பொருட்கள் சேகரிப்பு

கோவை, ஆக.3- பேரூர் படித்துறையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, ஞாயிறன்று பொதுமக்கள் படையலிட்ட 2 டன் உணவுப் பொருட்களை தன்னார்வலர் கள் சேகரித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு, காலம் சென்ற முன்னோர்கள் மற்றும் குழந்தை களின் நினைவாக தேங்காய், பழம், உணவுப் பொருட்களை கோவை, பேரூர் படித்துறையில் படையலிட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர். கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காலை முதல் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கூடி தர்ப்பன மண்டபத்திலும், ஆற்றங்கரையிலும் வழிபாடு செய்தனர். ஒவ்வொரு ஆண் டும் இதற்காக பழங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவை வழிபாட்டிற்கு பின் ஆற்றில் விடப்படுகிறது. இவ்வாறு மக்கள் வழிபாட்டிற்கு கொண்டு வரும் உணவுப் பொருட்களை ஆதரவற்றோ ருக்கு வழங்கும் வகையில் கோவை  குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் நோ புட் வேஸ்ட் தன்னார்வலர்கள், பேரூர் பேரூராட்சி தூய்மைப் பணியா ளர்களுடன் இணைந்து உணவுப் பொருட்களை பிரித்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பழங்கள்,  தேங்காய்கள், காய்கறி உள்ளிட்ட உண வுப் பொருட்கள் தனித்தனியாக பிரித் தெடுக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 2 டன் அளவி லான தேங்காய், ஆப்பிள், மாம்பழம்,  ஆரஞ்ச், திராட்சை, வாழை உள்ளிட்ட  பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் பெறப்பட்டு அவை ஏழை, எளிய ஆதர வற்ற மக்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் குளத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை போடாமல் இருக்க பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு தூய்மைப் பணி யாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தன்னார்வலர்களின் இந்த பணியை பொதுமக்கள் பாராட்டினர்.