tamilnadu

img

ஆலந்தூரில் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு நிலம் மீட்பு

ஆலந்தூரில் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு நிலம் மீட்பு

ஆலந்தூர், அக்.28- ஆலந்தூரில் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு நிலத்தை செவ்வாயன்று (அக்.28) வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர். ஆலந்தூர் நீதிமன்றம் அருகே ஜி.எஸ்.டி.சாலையில் சுமார் 15 கிரவுண்ட் அரசு நிலம் குத்தகை விடப்பட்டிருந்தது. குத்தகை காலம் முடிந்து பின்னரும் அந்த இடத்தில் வணிக ரீதியான கட்டிடம் செயல்பட்டு வந்தது. இந்த இடத்தை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்திரவின்பேரில், வட்டாட்சியர்கள் ஆறுமுகம், நடராஜன், செந்தில் ஆகியோர் அந்த இடத்திற்கு பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். அங்கிருந்த சரவணபவன் ஓட்டல் ஊழியர்களை வெளியேற்றி, பெயர் பலகைகளை அகற்றினார். கடைக்கு செல்லக்கூடிய வாயில்களில் சீல் வைத்தனர்.