tamilnadu

img

கொரோனா தடுப்பு சேவையில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள்....

மதுரை:
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 108 ஆம்புலன்ஸ் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. நாளொன்றுக்கு 2,200 கொரோனா தொற்றாளர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். தற்போது தொற்றாளர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவதற்காக மட்டும் 210 ஆம்புலன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் இரண்டு நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

108 ஆம்புலன்ஸ்களை இயக்கும் ஜி.வி.கே இ.எம்.ஆர்.ஐ.-யின் மாநிலத் தலைவர் எம்.செல்வகுமார்கூறுகையில், “ஆம்புலன்ஸில் நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் உள்ளது. ஒவ்வொரு ஆம்புலன்சிலும் இரண்டுஆக்ஸிஜன் சிலிண் டர்கள் உள்ளன. எங்கள்கவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியநோயாளிகள் மீது உள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 1,303 வாகனங்களில் 210 வாகனங்கள் கொரோனா தொற்றாளர்களுக்காக  இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு5,200 பேர் ஆம்புலன்ஸ் சேவையை நாடுகின்றனர். 

இவர்களில், சுமார் 2,200 பேர் கொரோனா தொற்றுக்கான சோதனையை மேற்கொண்டவர்கள் மற்றும் தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள். இந்தப் பணி தவிர வழக்கமான எங்களது சேவைகளும் தொடர்கிறது.“கொரோனா தொற்றாளர்களை ஏற்றிச்செல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு ஆம்புலன்ஸ்களை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இரண்டு ஆம்புலன்ஸ்களுக்கு அதிகமாக தேவையுள்ள மாவட்டங்களில் அதற்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றார்.

;