tamilnadu

img

தொடரும் 108 ஆம்புலன்ஸ் தீ விபத்து: ஆய்வு செய்ய உத்தரவு

சென்னை:
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள 1300 ஆம்புலன்ஸ் களை தணிக்கை செய்ய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப் பிரிவிலிருந்த மூதாட்டி ஒருவரை ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனை புதிய கட்டிடத்துக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வந்துள்ளனர்.ஆம்புலன்ஸை நிறுத்தி மூதாட்டியை இறக்க முற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸுக்குள் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டரில் வாயு கசிந்து தீப்பிடித்துள்ளது.இதைத் தொடர்ந்து மூதாட் டியை தூக்கியபடி ஓட்டுநர் செல்வகுமாரும், உதவியாளர் அம்பிகாவும் அங்கிருந்து தப்பினர்.தீ வேகமாகப் பரவிய நிலையில் ஆம்புலன்ஸ் வாகனம் முற்றிலும் எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்பு படையினர் தீயைப் போராடி அணைத்தனர்.இதேபோல் கடந்த வாரம் தென்காசி தலைமை அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளியை மேல்சிகிச்சைக் காக அழைத்துச் செல்ல புறப் பட்ட ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்தது. தீ விபத்தால், மருத்துவமனை முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.கொரோனா காலத்தில் தொடர்ச்சியான இயக்கத்தினால் ஆம்புலன்ஸுகளை பராமரிக்க நேரமில்லை என்று கூறப்படுகிறது.செங்கல்பட்டு தீ விபத்து எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 1,300 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய முதன்மை செயல் அதிகாரி செல்வகுமார் தலைமையில், பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்க சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

;