tamilnadu

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 108 ஆம்புலன்ஸ் எரிந்தது

தென்காசி
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 1 மணி அளவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியை மேல் சிகிச்சைக்காக பாளைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப டாக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

அதன்படி தென்காசி அரசு மருத்துவமனையில் உள்ள  108 ஆம்புலன்ஸ் டிரைவர்இசக்கிமுத்து மற்றும் ஊழியர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் துணையுடன் அந்த நோயாளியை ஆம்புலன்சில் ஏற்றிபாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தயாரான நிலையில் அந்த நோயாளிக்கு ஆக்சிசன் சிலிண்டர் பொருத்தி உள்ளனர். அப்போது அந்த ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து வித்தியாசமான ஒரு சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் இசக்கிமுத்து, உடனடியாக அவசர அவசரமாக அந்த நோயாளியை 108 ஆம்புலன்சில் இருந்து கீழே இறக்கி மருத்துவமனை ஊழியர்களின் துணையுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த நோயாளியை மருத்துவமனைக் குள் கொண்டு சேர்த்து விட்டு ஆம்புலன்ஸ் டிரைவர் இசக்கிமுத்து வேகமாக வெளியே வந்து பார்த்த போது பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. 

அடுத்த நொடியில் 108 ஆம்புலன்ஸ் முழுவதுமாக தீப்பற்றி எரிந்து உள்ளது. தீயை அணைக்க மருத்துவமனை ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர் களால் அந்த தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தகவலறிந்த தென்காசி தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்துதீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் அந்த ஆம்புலன்ஸ் முழுவதுமாக எரிந்துவிட்டது.108 ஆம்புலன்ஸ் மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற பிறகு வெடித்து தீப்பற்றி இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டி
ருக்க கூடும். நல்ல வேளையாக அந்த ஆம்புலன்ஸ் வாகனம் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே அந்த ஆக்சிஜன் சிலிண்டரில் வித்தியாசமான சத்தம் கேட்டதால் டிரைவர் துரிதமாக செயல்பட்டதால் பெரும்அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இச்சம்பவம் குறித்து தென்காசி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;