கேரள மாநிலம் உருவான நவம்பர் 1 துவங்கி ஒருவாரத்திற்கு ‘கேரளீயம்’ விழாவை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை முதல்வர் பினராயி விஜயன் புதனன்று துவக்கி வைத்தார். திரைக்கலைஞர்கள் கமலஹாசன், மம்மூட்டி, மோகன்லால் மற்றும் கேரள அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.