tamilnadu

img

மகாராஷ்டிராவில் ஒரே ஆண்டில் 2,400 எச்.ஐ.வி மரணங்கள்

மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 400 பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுமரணமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, இத்தகவலைத் தெரிவித்துள்ளார். “2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் மட்டும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப் பட்டு 2 ஆயிரத்து 460 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இந்நிலையில், எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கலாம் என சந்தேகத்துக்குரிய நோயாளிகளுக்குத் தொடர்ந்து அரசு பல சிகிச்சைகளை அளித்து வருகிறது.தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்தான அனைத்து செயல் திட்டங்களுக்குமான நிதி உதவி செயல்முறையில் உள்ளது” என்று ஏக்நாத் ஷிண்டேகூறியுள்ளார்.

மேலும், “தேசிய எய்ட்ஸ் மையம் சார்பில் கூறப்படும் ஆலோசனைகளை செயல்படுத்துவதிலும், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும், தங்கள் அரசு தாமதம் எதையும் காட்டவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில், பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சிநடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;