மகாராஷ்டிராவில்மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 199 நாடுகளில் கொரோனா தொற்று பரவி உள்ளது. இதையடுத்து இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் கொரோனாவால் மேலும் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்துஅம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்ததாவது:
மகாராஷ்டிரத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 59 மும்பையிலும் 3 பேர் நாகரிலும், தானேயில் 2 பேரும், கல்யான் டோம்பிவிலியில் 2 பேரும் நவி மும்பையில் 2 பேரும், வாஷி விராரில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.