tamilnadu

img

மஞ்சுவிரட்டு: கிணற்றில் தவறி விழுந்த காளை பலி

ஆம்பூர், ஜன. 22- திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி அருகே 2 கிராமத்தில் மஞ்சு விரட்டு போட்டி 500க்கும் மேற்பட்ட  காளை கள் பங்கேற்றன ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர். போட்டியில் கலந்து கொண்ட ஒரு காளை தவறி விழுந்து உயிரிந்தது. வாணியம்பாடி அடுத்த நிம்மி யம்பட்டு மற்றும் கொத்தகோட்டை ஆகிய  பகுதிகளில் மயில் திருவிழாவை முன்னிட்டு 154 ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு  போட்டி நடைபெற்றது. இதில் 500க்கும்  மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.  ஏராளமான பொதுமக்கள் மஞ்சுவிரட்டு போட்டியை கண்டுகளித்தனர். இதில் திருவிழா மற்றும் மஞ்சுவிரட்டு போட்டி களை குறிவைத்து இளைஞர்கள் மத்தி யில் சூதாட்டம் நடைபெறுகிறது. அதில் மூன்று கட்டை சூதாட்டம் பணத்தை வைத்து விளையாடுகின்றனர். அங்கு வரக்கூடிய அவர்களில் குறிவைத்து இந்த சூதாட்ட கும்பல் நடத்துகின்றனர். அப்போது அங்கு வந்த காவல் துறையி னர் விரட்டியும் கூட செல்லாமல் தொடர்ந்து  மூன்று கட்டை சூதாட்டம் நடைபெற்று வரு கிறது. இதனால் அப்பகுதியில் வரக்கூடிய  இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த  சூதாட்டத்தில் ஈடுபடுவதால் இதை முற்றி லுமாக தடுக்க வேண்டும் என மஞ்சுவிரட்டு  ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதேபோல் கொத்த கோட்டை பகுதியில் மஞ்சு விரட்டின் போது கலந்துகொண்ட சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான காளை மாடு ஒன்று போட்டியில் கலந்து கொண்டு ஓடி கொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;