tamilnadu

img

வாரச்சந்தையை கூடவிட்டு ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பாப்பாரப்பட்டி பேரூராட்சி

பென்னாகரம், ஆக. 16- வாரச்சந்தையை கூடவிட்டு கொரோ னா ஊரடங்கு விதி முறைகளை பின்பற் றாத பாப்பாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகத் தினர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூ ராட்சியில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதனால், கடந்த வாரத்தில் பேரூராட்சி முழுவதும் தனிமைப் படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் வியாழனன்று நடைபெ றும் வாரச்சந்தை கடந்த இருபது வாரங்களாக நடத்த அனுமதிக்கப்படவில்லை. இந்நிலை யில், காய்கறி மார்க்கெட் புதிய பேருந்து நிலை யத்தில் சில தளர்வுகளுடன் நடைபெற்று வரு கிறது. தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலை யில், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வங்கி கள்,  மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ஊர டங்கு விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட வில்லை என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஊரடங்கு விதிகளை மீறி வாரச்சந்தை கூடுகி றது.

இதில், ஆடு, கோழி வியாபாரம் நடை பெறுகிறது. இங்கு அதிகமாக கூட்டம் கூடு வதால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாப்பாரப் பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர், வாரச்சந்தை குத்தகைதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டும், காணாமல் சந்தை கூடு வதை அனுமதித்து வருவதாக குற்றஞ்சாட் டப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத் தில் விவசாயிகளின் விளை பொருட்கள் மற் றும் சாலையோர காய்கறி கடைகள், பூக்க டைகள், தள்ளுவண்டிக் கடைகள்,  இறைச்சி மற்றும் மீன் கடைகள் உள்ளிட்டவைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரர்கள் மீதும், அதற்கு உடந்தையாக செயல்படும் பேரூராட்சி  நிர்வாகத்தினர் மீது மாவட்ட நிர் வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டா ரச் செயலாளர் சக்திவேல் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

;