tamilnadu

கணவர் தற்கொலைக்கு நீதி விசாரணை கோரி மயிலாடுதுறை உதவி ஆட்சியரிடம் மனைவி மனு போலீசார் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு

தரங்கம்பாடி, மே 27- மயிலாடுதுறை கச்சேரி சாலையில் கல் பட்டறை வைத்திருந்தவர் ஜெயக்குமார் (50). இவருக்கும், இவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் ஜெயக்குமாரை எதிர்தரப்பினர் தாக்கியபோது அவர்கள் மீது மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததில் போலீசார் ஜெயக்குமார் மீதும் சேர்த்து வழக்கு பதிவு செய்ததோடு, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலிருக்கும் போதே சொத்தை பிரிக்க சொல்லி மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு ஜெயக்குமாரை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயக்குமார், கடந்த மாதம் தற்கொலை செய்து உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர் இறந்த பின்பு டைரியில் தனது சாவிற்கு யார் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தது கிடைத்துள்ளது என்றும் தனது கணவரை சொத்து பிரச்சனைக்காக அவமானப்படுத்திய நபர்கள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்து  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் தன்னை மிரட்டி சொத்துக்களை எழுதி கொடுக்க வேண்டுமென்று கட்டப்பஞ்சாயத்து செய்து தன் மீதும் பொய் வழக்கு பதிவு செய்து மிரட்டி வருகின்றனர் என ஜெயக்குமாரின் மனைவி ராஜராஜேஸ்வரி மயிலாடுதுறை உதவி ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதன்பேரில் செம்பனார்கோவில் போலீசார் ராஜராஜேஸ்வரியை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதற்காக திங்களன்று காலை 9 மணிக்கு வந்த அவரை, நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர். செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணை நடத்த அதிகாரிகள் வராததால், அன்று இரவு ராஜராஜேஸ்வரி வீட்டிற்கு திரும்பி சென்றார். தனது கணவரின் தற்கொலைக்கு உரிய நீதி கிடைக்கவில்லையெனில் தனது பிள்ளைகளோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என ராஜராஜேஸ்வரி கூறியுள்ளார்.

;