மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு முறையீடு
கோவை, மே 11 - ஊரடங்கு காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்கிற அரசின் உத்தரவை மதிக்காத இன்டோசெல் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி சிஐடியு சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத் தல் காரணமாக தமிழகம் உள்ளிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக் கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் ஊதி யத்தை நிறுத்துவதோ, வேலையை பறிப்பதோ கூடாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. ஆனால், அரசின் அறிவிப்பை எந்த ஒரு நிறுவனமும் பின்பற்றுவதாக தெரியவில்லை. குறிப்பாக, பெரு நிறுவனங்கள் ஊரடங்கை காரணம்காட்டி ஊதியம் தர மறுப் பது தொழிலாளர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஒருபகுதியாக கோவை சிட்கோ பகுதியில் உள்ள இன்டோ செல் நிறுவனம் ஊரடங்கு காலத் திற்கான ஊதியத்தை மறுத்துள்ளது. இதனையடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிஐ டியு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஊரடங்கு கால ஊதியத்தை பெற்று தர வலியு றுத்தி மனு அளித்தனர். அம்மனு வில் கூறியிருப்பதாவது, ஊரடங்கு காலத்தில் ஊதியம் தர வேண்டும் என்கிற உத்தரவு எங்களுக்கு பொருந்தாது என நிர்வாகம் தெரி விக்கிறது. ஊதியம் இல்லாததால் இல்லத்தில் பெரும் நெருக்கடியை தொழிலாளர்கள் எதிர்கொள்கி றோம். ஆகவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதேபோல், கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரி டம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, கோவை பி.கே.புதூரில் செயல்படும் கேரள ரோடுவேஸ் நிறுவனம் ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை தர மறுக்கி றது. இந்த ஊதியம் வழங்கப்ப டாததால் அதனையே நம்பியுள்ள தொழிலாளர்கள் குடும்பங்கள் வேதனையில் உள்ளனர். எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு முழு ஊதியத்தை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்திருந்தனர். முன்னதாக, இந்த மனுக்களை சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, என்.செல்வராஜ், சாலை போக்குவரத்து சங்க செயலாளர் ஏ.எம்.ரபீக் மற்றும் யு.கே.சிவஞானம், கன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆட்சியரை சந்தித்து அளித்தனர்.