tamilnadu

img

பேட்மிண்டன்... பரிசு விதிகள் மாற்றப்படுமா?

விளையாட்டு உலகின் முன் னணி பிரிவான பேட்மிண் டன் பிரிவில் ஒற்றையர் இரட்டையர் என இரண்டு பிரிவு உள்ளது. ஆடவர் ஒற்றையர், இரட்டையர் - மகளிர் ஒற்றையர், இரட்டையர் - கலப்பு இரட்டையர் என மொத்தம் 5 பிரிவு களில் போட்டி நடத்தப்படுகின்றன.  இவற்றில் முதன்மை மற்றும் கடின மானது என ஒற்றையர் பிரிவைக்  கூறி னாலும், உண்மையில் இரட்டையர் பிரிவு தான் மிகக்கடினமானது. ஏனென் றால் ஒற்றையர் பிரிவில் ஸுமாஷ் குறைவான வேகத்தில் தான் விளாசு வர்கள். அதாவது சராசரியாக 200 கிமீ வேகத்தில் தான். ஆனால் இரட்டை யர் பிரிவுகளில் சாதாரண ஸ்மாஷ் ஷாட் கூட 300 கிமீ வேகத்தில் விளாசு வார்கள். இதனால் கணிப்பது மிக கடினம். குறிப்பாக ஒற்றையர் பிரிவு களில் ஸ்மாஷ் ஷாட்களை அதிகம் விளாச மாட்டார்கள். டிராப் ஷாட் தான் அதிகம். ஓடிவந்து எதிர் பக்கம் திருப்பி விட்டால் போதும்.  ஆனால் இரட்டையர் பிரிவில் அப்படி அல்ல அடிப்பது எல்லாம் ஸ்மாஷ் தான். டிராப் ஷாட் எப்பொழு தாவது தான் விளாசுவார்கள். இரட்டை யர் பிரிவில் இமைகள் அசையாமல் விளையாட வேண்டும். சிந்திக்க நேர மில்லை. அடிதடி போல ஆக்ரோஷ குணம் இருந்தால் மட்டுமே இந்த பிரிவில் சாதிக்க முடியும். ஆனால் இதனைச் சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் கண்டுகொள்வதில்லை.  எளிதான ஒற்றையர் பிரிவுக்கு மட்டும் பரிசுத்தொகை முழுவதையும் வழங்கிவிட்டு, நிவாரணம் போலக் கடினமான இரட்டையர் பிரிவுக்குப் பரிசுத்தொகை வழங்குவது பார பட்சமானது. இனி வரும் காலங்களில் இந்த பரிசுத்தொகை விதிமுறை மாற்றப்படுமா? என இளசுகள் ஏங்கிக்கொண்டிருக்கின்றன.

;