tamilnadu

img

பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூரில் வைகோ பிரச்சாரம்

பெரம்பலூர், ஏப்.2- திமுக கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து திங்களன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அவர் பேசுகையில், நாட்டில் அடுத்து மலர்வது ஜனநாயகமா அல்லது பாசிசமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதில் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களை வேண்டுகிறேன். இந்தியாவில் இருந்து மதச்சார்பின்மையை அகற்ற பாஜகபிரயத்தனப்படுகிறது. மதச்சார்பின்மையை வலியுறுத்திய மகாத்மா காந்தியின் உருவத்தை இந்து மகாசபா அவமதிக்கிறது. இந்தியாவில் இது போன்ற நிலை உருவாகியிருக்கிறது. தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளன. 5 லட்சம் பேர்வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்காத இந்த அரசு, இருந்த வேலைவாய்ப்புகளைப் பறிபோகச் செய்துள்ளது. தமிழக அரசின் அலட்சியத்தால் இங்கு அமைய வேண்டியபல்வேறு தொழிற்சாலைகள் வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டன. சமூக நீதியைநிலை நாட்ட தமிழகத்தில் திமுக ஆட்சி மலரவேண்டும். மத்தியில் ஜனநாயகத்தைக் காக்க திமுக தலைமையிலான கூட்டணிக்குமக்கள் ஆதரவு தர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்படாமல் அதிமுக அரசால் கிடப்பில்போடப்பட்ட கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் விரிவாக்கத் திட்டம், மருத்துவக் கல்லூரி, ரயில்பாதை திட்டம், வெங்காய பதனக் கிடங்குபோன்ற திட்டங்களை நிறைவேற்ற பாரிவேந்தரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.கூட்டத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் சின்னப்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.செல்லதுரை எ.கணேசன், மதிமுகமாவட்ட நிர்வாகிகள் துரைராஜ், ஜெயசீலன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;