tamilnadu

img

வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில் திட்டமிட்டே கலவரம் ஏற்படுத்தப்பட்டது

பெரம்பலூர், ஏப்.22 -அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவின் போது தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மாநில துணை செயலாளர் சின்னை பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், தீஒமு சட்ட ஆலோசகர் ப.காமராசு, மற்றும் பிரதீப் தமுஎகச மாவட்ட செயலாளர் ப.செல்வகுமார் மற்றும் மவுணன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ராமர், ஒன்றிய செயலாளர் எ.கந்தசாமி, நகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது, பொன்பரப்பி ஊராட்சியில் அனைத்து சமூகத்தினரையும் சேர்த்து சுமார் 5000 வாக்குகள் உள்ளன. இதில்தலித் வாக்காளர்கள் 1000 பேர் உள்ளனர். அதில் நாங்கள் அனைவரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க முடிவு செய்திருந்தோம். இந்நிலையில் மதியத்திற்கு மேல் ஆதிக்க சமூகத்தினை சேர்ந்த சிலர்வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில் கலவரம் செய்ய திட்டமிட்டுள்ள தாகவும் தெரிவித்தனர். எனவே காலை11 மணிக்குள்ளாகவே 60 சதவீதத்திற்கு மேல் வாக்களித்திருந்த நிலையில் ஆத்திரமடைந்த ஆதிக்க சமூகத்தினர் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் வாக்குச் சாவடி மையத்திற்கு அருகே பானைகளை போட்டு உடைத்து தகாதவார்த்தைகளால் திட்டி பிரச்சனை களை துவக்கினர்.


மேலும் தலித் தெருவிற்கு வந்து பானைகளை போட்டு உடைத்தும் அங்கிருந்த தலித் தெருவிற்குள் நுழை ந்து வீடுகளை அடித்து நொறுக்கியும் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரையும் தாக்கி படுகாயப்படுத்தினர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தடுக்கமுயற்சித்த போது அதையும் மீறிவீடுகளையும், இரு சக்கர வாகனங் களையும் சேதப்படுத்தி விட்டு தப்பி யோடி விட்டனர். இதில் காயமடைந்த அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதில் பலத்த காயமடைந்த இருவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 63 வீடுகளும், 12 இருசக்கர வாகனங்களும் சேத மடைந்து உள்ளதாகவும், ஜனநாயக கடமையாற்ற நினைத்த எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.


தனி வாக்குச் சாவடி


மேலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் மைனாரிட்டியாக உள்ள எங்கள் சமூகத்தினருக்கு அச்சுறுத்தல்இருந்து வருகிறது. எனவே எங்கள் பகுதியிலேயே அமைந்துள்ள அரசு பள்ளியில் தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். மேலும் ஆதிக்கசமூக பகுதியில் இயக்கப்படும் வாட்டர்டேங்க், மின் விநியோக டிரான்ஸ்பார்மர், ரேசன் கடைகளை பிரித்து எங்களுக்கு தனியாக அமைத்துத் தர வேண்டும், வன் கொடுமை சட்டவிதிகளின்படி சேத மடைந்த வீடுகளுக்கு பதிலாக பசுமை வீடுகள் கட்டித் தர வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும்இச்சம்பவத்திற்கு காவல்துறை, பாதிக்கப்பட்ட எங்கள் சமூகத்தினர் மீதே கொலை வழக்கு பதிவு செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.மேலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் மைனாரிட்டியாக உள்ள எங்கள் சமூகத்தினருக்கு அச்சுறுத்தல்இருந்து வருகிறது. எனவே எங்கள் பகுதியிலேயே அமைந்துள்ள அரசு பள்ளியில் தனி வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். மேலும் ஆதிக்கசமூக பகுதியில் இயக்கப்படும் வாட்டர்டேங்க், மின் விநியோக டிரான்ஸ்பார்மர், ரேசன் கடைகளை பிரித்து எங்களுக்கு தனியாக அமைத்துத் தர வேண்டும், வன் கொடுமை சட்டவிதிகளின்படி சேத மடைந்த வீடுகளுக்கு பதிலாக பசுமை வீடுகள் கட்டித் தர வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும்இச்சம்பவத்திற்கு காவல்துறை, பாதிக்கப்பட்ட எங்கள் சமூகத்தினர் மீதே கொலை வழக்கு பதிவு செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.


பாதிக்கப்பட்டவர்கள் மீதே கொலை வழக்குப் பதிவு


இது குறித்து தெரிவித்த தீண்டாமைஒழிப்பு முன்னணியினர், ஜனநாயக கடமையாற்றிய தலித் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொன்பரப்பி கிராம மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தினர் மீதே கொலை வழக்கு பதிவு செய்துள்ளதைகாவல்துறை வாபஸ் பெற வேண்டும். சில தூண்டுதல் சக்தியின் பெயரால் உள்நோக்கத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தினர். (ந.நி.)

;