tamilnadu

img

செப். 27-ல் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிர்ப்பு.... தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகள் சாலை - ரயில் மறியல்....

பெரம்பலூர்:
விவசாயிகள் விரோத மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக செப்டம்பர் 27 அன்று தமிழ்நாட்டில் ஒரு லட்சம் விவசாயிகள் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு அறிவித்துள்ளது.              

 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் பெரம்பலூரில் செப்டம்பர் 12 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் வி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் என்.செல்லத்துரை வரவேற்றார். மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விளக்கிப் பேசினார். மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களையும் மின்சார திருத்த மசோதா 2020 ஐயும் ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்திட வலியுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா  சார்பில் கடந்த 10மாதங்களாக தில்லி நெடுஞ்சாலை களில் விவசாயிகள் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் பாஜக அரசின்சீர்குலைவு வேலைகளையும் தாக்குதல்களையும் முறியடித்து போராட்டங் கள் வலுவடைந்து வருகின்றன.  செப்டம்பர் 5 அன்று முசாபர் நகரில் 10 லட்சம் விவசாயிகள் பங்கேற்ற மகா பஞ்சாயத்து நடைபெற்றது. தொடர்ந்து ஒன்றிய அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் செப்டம்பர் 27 அன்று பாரத் பந்த் நடத்திட அறிவித்தனர். தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மாதர் சங்கங்கள், வாலிபர் சங்கம்,வணிகர்கள், ஜனநாயக இயக்கங்கள் ஆகியவை பங்கேற்க செய்து பாரத்பந்த் போராட்டத்தை வெற்றிபெறச்செய்வது, லட்சக்கணக்கான விவசாயிகளை திரட்டி ஒன்றிய அரசிற்கு எதிராக சாலை மற்றும்  ரயில் மறியல் போராட்டங்களை நடத்துவது என்று  தீர்மானிக்கபட்டது. 

கொள்முதல் நிலையங்களில் அடிப்படை வசதிகளை செய்க!
தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டுகோடை நெல் சாகுபடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிதற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தேக்கம் ஏற்பட்டு விவசாயிகள் காத்திருக்கும் நிலையும் சமீபத்தில் பெய்த மழையால் நெல் நனைந்து சேதமடைகிறது. கொள்முதல் நிலையங்களில் தேவையான கொட்டகை, தார்பாய்கள் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கொள்முதல் நெல்லுக்கான தொகையும் 15 நாட்களுக்கு பின்னரே வரவு வைக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் கோரும் அனைத்து இடங்களிலும் தமிழக அரசே நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். கொள்முதல் தொகையினை உடனே வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனே குடோனுக்கு அனுப்புவதோடு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.

கொய்யா பழத்திற்கு குறைந்தபட்ச விலை 
2021 ஜனவரி மாதம் பருவம் தவறிபெய்த தொடர் மழையால் மாநிலம் முழுதும் சம்பா பருவ சாகுபடி அறுவடை நேரத்தில் முற்றிலும் அழிந்து போனது. அதற்கு மாநில அரசு குறைந்த நிவாரணம் மட்டுமே வழங்கியது. தற்போது வரை பயிர்காப்பீட்டு திட்டம்மூலம் கிடைக்க வேண்டிய இழப்பீடுஅறிவிக்கப்படவில்லை. பயிர் காப்பீடுகேட்டு விவசாயிகள் போராடியதால் ஒருபகுதி நிதியை மட்டும் அறிவித்தது. ஒன்றிய அரசும் காப்பீட்டு நிறுவனத் திற்கு உரிய நிதியை அனுப்புவதோடு மாநில அரசும் முழு நிவாரணத்தையும் வழங்கி விவசாயிகளை பாதுகாத்திடவேண்டும். தற்போது கொய்யா சாகுபடி தமிழகம் முழுவதம் அதிகமாக நடைபெற்றுள்ளதால் விலை வீழ்ச்சியடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் கொய்யா பழத்தை விவசாயிகள் சாக்கடையில் கொட்டிச் செல்லும் நிலையில் உள்ளனர். எனவே கொய்யா விவசாயிகளை பாதுகாக்க அரசு பழக்கூழ் தொழிற்சாலை அமைத்து பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க குளிர்சாதன கிடங்கு
கள் அமைத்து அரசே குறைந்தபட்ச விலை தீர்மானிக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள்  நிறை வேற்றப்பட்டன.

;