tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜூன் 2-ஆவது வாரத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர்...?

சென்னை, மே 2- ஜூன் 4 அன்று மக்கள வைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஜூன் 2-ஆவது வாரத்தில் தமிழ் நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூட வாய்ப்பு உள்ள தாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலை மையில் அலுவல் ஆய்வுக் குழு ஜூன் 2-வது வாரம் கூடி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும். இந்தக் கூட்டத்தொடர் 25  நாட்களுக்கு மேல் நடை பெறவுள்ள நிலையில், துறை ரீதியான மானிய கோரிக் கைகள் மீது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

சென்னை, மே 2- இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே  5  (ஞாயிற்றுக்கிழமை) அன்று  நடைபெற உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு 3 நாட்கள் முன்னதாக தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) தேசிய தேர்வு முகமை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. https://exams.nta.ac.in/NEET என்ற வெப்சைட்டிற்குச் சென்று, விண்ணப்ப படிவம் எண் மற்றும் பிறந்த தேதி யைப் பதிவிட்டு, நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏதா வது சிரமம் ஏற்பட்டால் 011-40759000 அல்லது neet@nta.ac.in இணைய தளத்தில் புகார் செய்ய லாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

;