பெரம்பலூர், மார்ச் 11- பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் (வெள்ளிக்கிழமை) அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்களின் விபரம் குறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார். அதன்படி பெரம்பலூர் வட்டத்தில் பொம்மனப்பாடி, வேப்பந்தட்டை வட்டத்தில் திருவாலந்துறை, குன்னம் வட்ட த்தில் எழுமூர் (கிழக்கு) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் கொள த்தூர் (மேற்கு) ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை களை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்து வதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி மக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.