பெரம்பலூர், பிப்.16- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை வட்டம் விசுவக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலையில் போட்டி நடைபெற்றது. திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 450 காளை கள் பங்கேற்றன. 400 மாடுபிடி வீரர்கள் குழுவாக அனுமதிக்கப்பட்டு காளை களை அடக்க முயன்றனர். இதில 19 வீரர் கள் காயமடைந்தனர். போட்டியை பார்வை யிட சென்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். காளைகளை அடக்கிய வீரர்க ளுக்கும், வீரர்கள் அடக்காத மாடுக ளின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.