tamilnadu

img

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா மனைவி மறைவு.... சு.வெங்கடேசன் எம்.பி., நேரில் ஆறுதல்....

பெரம்பலூர்:
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான  ஆ.ராசா எம்.பி.யின் மனைவி மு.அ.பரமேஸ்வரி கடந்த மே 29 அன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் ஆ.ராசாவை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மே 31 அன்று பெரம்பலூரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வந்து ஆ.ராசாவை சந்தித்து ஆறுதல் கூறினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மற்றும் தமுஎகச மாவட்டச் செயலாளர் ப.செல்வகுமார், கவிஞர் இராமர் ஆகியோர் உடனிருந்தனர்.

;