tamilnadu

img

பெரம்பலூரில்  குற்றவியல் கோர்ட் திறப்பு

 பெரம்பலூர், ஆக.12- பெரம்பலூரில் குற்றவியல் கோர்ட் இரண்டு வேப்பந் தட்டையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் திறப்பு விழா நடைபெற்றது. ஐகோர்ட் நீதியர சர்கள் ரவிச்சந்திரபாபு, புகழேந்தி ஆகியோர் திறந்து வைத்து பேசினர். விழாவில் ஆட்சியர் சாந்தா, எஸ்பி திஷாமித்தல், வக்கீல்கள் சங்க தலைவர் வள்ளுவன் நம்பி, அட்வகேட்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் மூத்த வக்கீல் பிரசன்னம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட தலைமை நீதிபதி லிங்கேஸ்வரன் வரவேற்றார். மாவட்ட குற்றவியல் கோர்ட் நீதிபதி கிரி நன்றி கூறினார்.