பெரம்பலூர், டிச.16- பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் தெரணி ஊராட்சி 6-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வட்டக்குழு உறுப்பினர் ஆர்.மகேஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார். வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், வட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.முருகேசன், ரெங்கநாதன், செல்லதுரை உடனிருந்தனர். பெரம்பலூர் ஒன்றியம் அம்மாபாளையம் ஊராட்சி 9வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வட்டக்குழு உறுப்பினர் கா.ராதிகா வேட்பு மனு தாக்கல் செய்தார். வேப்பந்தட்டை சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.முருகேசன் கை.களத்தூர் ஊராட்சி 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு என்.செல்லதுரை, பி.ரமேஷ், எ.கலையரசி, சுப்பையா, துரைசாமி, காமராசு, செல்வகுமார், வீரமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
நாகப்பட்டினம்
கட்சி சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கு 4 பேர், ஊராட்சி ஒன்றியக் குழு பதவிக்கு 32 பேர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 60 பேர் என மொத்தம் 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதன் விவரம் வருமாறு-
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்:- கீழையூர் ஒன்றியத்தில் -1, நாகை ஒன்றியத்தில் -1, தரங்கம்பாடி வட்டத்தில் -1, சீர்காழி வட்டத்தில் -1. கூடுதல்-4 பேர் மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஊராட்சி ஒன்றியம் வார்டுகள்:- தலைஞாயிறு ஒன்றியத்தில் -3, வேதாரணியம் ஒன்றியத்தில் -2, கீழையூர் ஒன்றியத்தில் -5, நாகை ஒன்றியத்தில்- 5, தரங்கம்பாடி வட்டத்தில் -5, சீர்காழி
வட்டத்தில் -1, மயிலாடுதுறை வட்டத்தில் -3, குத்தாலம் ஒன்றியத்தில்-2, திருமருகல் ஒன்றியத்தில் -2, கீழ்வேளூர் ஒன்றியத்தில் -5, ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்குக் கூடுதல்- 33 பேர் மனு தாக்கல் செய்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள்:- தலைஞாயிறு ஒன்றியத்தில்- 6, வேதாரணியம் ஒன்றியத்தில் -4, கீழையூர் ஒன்றியத்தில் -15, நாகை ஒன்றியத்தில் -9, தரங்கம்பாடி வட்டத்தில்- 7, சீர்காழி
வட்டத்தில் -1, மயிலாடுதுறை வட்டத்தில் - 2, குத்தாலம் ஒன்றியத்தில் - 2, திருமருகல் ஒன்றியத்தில் -1, கீழ்வேளூர் ஒன்றியத்தில் -12, உட்பட, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குக் கூடுதல் 60 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆகக் கூடுதலாக மாவட்டம் முழுவதும் சி.பி.எம். சார்பில் 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் நாகைமாலி தெரிவித்துள்ளார்.
அரசவனங்காடு ஊராட்சி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அரசவனங்காடு ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புக்கு வேட்பு மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினரும் மாதர் சங்க ஒன்றிய செயலாளருமான எல்.சுலோச்சனா வேட்பு மனுவை தேர்தல் உதவி அலுவலரிடம் அளித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ் தம்புசாமி மற்றும் முன்மொழிந்த சுமத்ரா, கட்சி உறுப்பினர்கள் சிவதாஸ், பன்னீர், லோகநாதன், கிளை செயலாளர் பெத்தபெருமாள் உடனிருந்தனர். கரூர்
கரூர் ஊராட்சி ஒன்றியம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், கடவூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தலா ஒருவர் என மூன்று பேர் போட்டியிடுகின்றனர். கடவூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 11வது வார்டில் போட்டியிடும் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு வழங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் பழனிவேல், திமுக மாவட்ட பொருளாளர் கருப்பணன், ஒன்றிய செயலாளர் பிச்சை உடனிருந்தனர்.
தாந்தோணி ஒன்றியம்
தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் 12வது வார்டு வெள்ளியணை தென்பாகம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சியின் மேட்டுப்பட்டி பெண்கள் கிளைச் செயலாளர் சுகன்யா போட்டியிடுகிறார். இவர் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை வழங்கினார். கட்சியின் கரூர் நகர செயலாளர் எம்.ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.தண்டபாணி, ஆர்.ஹோச்சுமின், ராஜாங்கம், எஸ்.பி. ஜீவானந்தம், வடக்கு மேட்டுப்பட்டி கிளை செயலாளர் எஸ்.பி.ராஜேந்திரன் கிளை வையாபுரி, பிரியா, செல்வராஜ் கலந்து கொண்டனர். கரூர் ஒன்றியம்
கரூர் ஊராட்சி ஒன்றியம் 1 வார்டு திருக்காடுதுறை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சியின் உறுப்பினர் பி.ராமசுப்பு கரூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை வழங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம், திமுக கரூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, டிஆர்இயு சங்க மாநில நிர்வாகி சாம்பசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈஸ்வரன், ராஜேந்திரன், பொன் கந்தசாமி, செல்வம் உடனிருந்தனர்.