tamilnadu

img

உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா

பெரம்பலூர், பிப்.6- தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் உழவர் நாராயணசாமி நாயுடு 96 வது பிறந்த நாளை யொட்டி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலுள்ள அவரது சிலைக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது.  தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் என்.செல்லதுரை வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மாணிக்கம், அன்பழகன், நீல கண்டன், அரியலூர் மாவட்ட செய லாளர் விஸ்வநாதன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் அருகே எறையூர் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து போனதால் சின்ன வெங்கா யம், பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சின்னமுட்லு கொட்டரை நீர்த்தேக்க திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். 11 ஆண்டு களாக கிடப்பில் உள்ள அரசு மருத்து வக் கல்லூரியை பெரம்பலூரில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.