tamilnadu

img

போராட்டம் வெடிக்கும் முன் இந்தித் திணிப்பை நிறுத்திவிடுங்கள்... மத்திய பாஜக அரசுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை

பெங்களூரு:
சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக, இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘1949செப்டம்பர் 14’ ஆண்டுதோறும் இந்தி தினமாக, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

எனினும், பாஜக ஆட்சிக்கு வந்தபின்,இந்தி தினம் கொண்டாட்டம் கட்டாயம்ஆக்கப்பட்டு இருப்பதுடன், தாய்மொழி இந்தி அல்லாதவர்களையும் கொண்டாடச் சொல்லி நிர்ப்பந்தித்து வருகிறது. புதியகல்வி கொள்கை என்ற பெயரிலும் இந்தியைத் திணிக்கிறது. பாஜகவின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்திருப்பதுடன், ரயில் நிலையங்கள், மத்திய அரசு அலுவலக பெயர்ப்பலகைகளில் இருக்கும்இந்தி எழுத்து அழிப்புப் போராட்டங்களும் தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப் போன்றமாநிலங்களில் துவங்கியுள்ளன.இந்நிலையில், இந்தி தின கொண்டாட்டத்திற்கு கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான எச்.டி. குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வரிசையாக 10 பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:இந்தியா என்பது பலதரப்பட்ட மொழிகளின், பண்பாடுகளின், மரபுகளின் நிலம்.அவ்வாறிருக்கையில், இந்திக்கு மட்டும் தினம் கொண்டாடுவது இந்தித் திணிப்புதான். பெருமைக்குரிய கன்னட மொழி மக்கள் இதனை எதிர்க்கின்றனர். இந்தி தினம் என்பதை மொழித் திமிராகவே பார்க்கின்றனர்.உண்மையில், இந்தி நம் தேசிய மொழிகிடையாது, அப்படியொன்று அரசியல் சாசனத்திலேயே இல்லை. ஆயினும் இந்தி தேசிய மொழி என்று முன்னிறுத்தும் முயற்சி முன்பு இருந்தே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தற்போதுமேலும் அதிகரித்துள்ளது. 

மக்கள் புரட்சி வெடிப்பதற்கு முன்இத்தகைய போக்குகளை நிறுத்திவிட வேண்டும். கல்வியை காரணம் காட்டி இந்தியைத் திணிக்கக் கூடாது. மொழிஎன்பது சுயவிருப்பத் தெரிவு சார்ந்தது;திணிக்கக் கூடியது அல்ல. ஒரு மொழி
யை திணிப்பது மண்ணின்மொழியின் அடையாளத்தை அழிக்கக் கூடாது. சமீபகாலமாக இந்தி மொழி சித்தாந்தரீதியாக மாற்றப்பட்டு வருகிறது. தேசியவாதம், தேசபக்தி, இந்துத்துவாவுடன் இந்தி மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சி மிகப்பெரிய தேசத் துரோகம். 

நாட்டின் பன்முக, பன்மொழிக் கலாச்சாரத்திற்கு ஊறு விளைவிக்கும் இந்த செயல்கள் ஆபத்தில் முடியும். இந்தி மொழிபேசாத மாநிலங்களில் இந்தி தினம் கொண்டாடுவது கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும். மாநிலங்களில் இருமொழி கொள்கைஇருந்தால், மத்திய அரசுக்கு அதில் என்னபிரச்சனை? இந்தி மொழி பேசும் மாநிலங்களில் எல்லாம் மும்மொழி கொள்கைபின்பற்றப்படுகிறதா?இந்தி தினம் கொண்டாடித்தான் ஆகவேண்டும் என்றால், நாட்டின் பிற மொழிகளின் தினத்தையும் கன்னட மொழி தினத்தையும் கொண்டாட வேண்டும். தனித்தனி தேதிகள் இதற்காக குறிக்கப்பட வேண்டும். கர்நாடகா மாநிலம் உருவான நவம்பர் 1 கன்னட தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தில் 343, 344, 345 ஆகிய பிரிவுகளில் இந்திக்கு ஊக்கம் அளிக்கும் குழப்பமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அரசியல் அமைப்பு சட்டத்தில் அடிக்கடி திருத்தங்களை செய்து வரும் பாஜக, இதையும் மாற்ற வேண்டும். இதன் மூலம் கன்னடம் உள்பட பிற மொழிகளை பாதுகாக்க வேண்டும். கர்நாடகத்தில் இந்தியை எளிதாகபுகுத்திவிடலாம் என்று சிலர் திட்டமிட்டுஉள்ளனர். இதற்கு கர்நாடக பாஜக தலைவர்கள் நடந்து கொள்ளும் விதமும் ஒரு காரணமாக இருக்கலாம். கன்னடர்கள் நல்லிணக்க குணம் கொண்டவர்கள். அதையே பலவீனம் என்று கருத வேண் டாம். கன்னடர்களுக்கு இன்னொரு குணம்உள்ளது. அது வெடித்தால் என்ன ஆகும் தெரியுமா?இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.

;