tamilnadu

img

1,400 பேரை வேலையிலிருந்து நீக்கிய ரெடிமேட் நிறுவனம்...

பெங்களூரு:
கர்நாடகத்தில் கோகுல் தாஸ் ஆயத்த ஆடை நிறுவனம், தன்னிடம் பணியாற்றிய 1,400 ஊழியர்களை திடீரெனவேலையிலிருந்து நீக்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் கோகுல் தாஸ் ஆயத்தஆடை நிறுவனத்தின் யூரோஆடை பிரிவு, 10 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினர். கடந்த மார்ச் இறுதியில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட் டதை தொடர்ந்து நிறுவனம் மூடப்பட்டது. பின்னர் ஜூன் 8-ஆம் தேதி 20 சதவிகித ஊழியர்களுடன் நிறுவனம் மீண்டும் செயல்பட தொடங்கியது.அப்போது நிறுவனத்தின் வாயிலில், “கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுவனத்துக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கும் வகையில் 1,400 ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்’’ என்று பலகையில் எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இந்த விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அத்துடன் சுமார் ஆயிரம் பெண் ஊழியர்கள் திரண்டு, புதன்கிழமையன்று யூரோ ஆயத்த ஆடை பிரிவைமுற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, மாண்டியா மாவட்ட ஆட்சியர் எஸ்.பி. ராஜ்குமார் சம்பவ இடத்துக்கு வந்துஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊழியர்களை பணி நீக்கம் செய்தது தொடர்பாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில்உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

;