tamilnadu

img

கன்னட நகைச்சுவை நடிகர் ‘புல்லட்’ பிரகாஷ் திடீர் மரணம்

பெங்களூரு 
கன்னட திரையுலகின் முக்கிய நகைச்சுவை நடிகராக இருப்பவர் பிரகாஷ் (44). ராயல் என்பீல்டு இருசக்கர வண்டியில் பயணிப்பதால் இவரை ‘புல்லட்’ பிரகாஷ் என அழைப்பார்கள். பருமனான உடல்வாகை பெற்றிருந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உடல் குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து கடந்த ஒரு வருமடமாக வீட்டிலேயே இருந்தார். குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டதாகவும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் கூறினர். . 

இந்நிலையில், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கடந்த மாதம் துபாயில் உள்ள கொலம்பியா ஆசியா என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்குச் சிகிச்சை முடிந்து கடந்த 31-ஆம் தேதி பெங்களூரு போர்ட்டிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும்  பலனளிக்காமல் நேற்று மதியம் காலமானார்.  சிறுநீரகம், கணையம் அடுத்தடுத்து செயலிழந்ததால்,  ‘புல்லட்’ பிரகாஷ்  மரணம் அடைந்ததாக போர்ட்டிஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.325 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ‘புல்லட்’ பிரகாஷ் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். 

;