புவனேஸ்வர்,டிச.31- ஒடிசா மாநிலத்தில் தோட்டக் கலைத்துறை சார் பில், விவசாயிகளுக்கு வழங்கு வதற்காக, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெளிப்புநீர் பாசனக் கருவி வாங்க தனி யார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந் தது. இதற்காக தோட்டக் கலைத்துறை இயக்குநர் பிஜய் கேதன் உபாத்யாயா, அந்த நிறுவனத்திடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதையடுத்து, அந்த ஐஏஎஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், உபாத்யாயாவின் வீடுகளில் லஞ்சஒழிப்பு காவல்துறை யினர் சோதனை நடத்தி வருகின்றனர்.