tamilnadu

கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

பெங்களூரு, ஜூன் 1- கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 28  தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும்மஜத கட்சிகள், தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. பாஜக, 25 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக ஆதரவு சுயேச்சை ஓரிடத்தில் வென்றார்.  மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வர காங்கிரஸ் மற்றும் ம.ஜ.தகட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கபாஜக முயன்று வருகிறது.இந்தநிலையில் கர்நாடகாவில் நகர்ப்புறஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மே 29-ஆம் தேதி நடைபெற்றது. நகர்ப்புறஉள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு தேர்தலில் மொத்தமுள்ள 1,221 வார்டுகளில் காங்கிரஸ் 509 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவெறும் 366 வார்டுகளில் மட்டுமே வென்றுள் ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் 174 வார்டுகளில் வென்றது. 160 வார்டுகளில் சுயேச்சைகளும், பிஎஸ்பி 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும் வென்றன.இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில் ‘‘காங்கிரஸ் 42 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அப்படியானால் மக்களவைத் தேர்தலில் பாஜக எப்படி வென்று இருக்க முடியும்’’ எனகேள்வி எழுப்பியுள்ளார்.